தை 9 ம் திகதியும் அதன் பின்னரும் இடம் பெறும் நிகழ்வு:· பிறக்கவுள்ள புத்தாண்டின் முதல் நிகழ்வாக மழலையர் மற்றும் பாலர் பாடல் இடம்பெறும்· பாடல்கள் தமிழர் பண்பாடு, தமிழ்மொழி சார்ந்த பாடல்களாக இருப்பது விரும்பத்தக்கது.
மழலையர் , பாலர் , ஆண்டு 1 , 2 வகுப்புக்களுக்கு 09.01.2021 தேதியிலும் , 3, 4 வகுப்புக்களை 10.1.2021 தேதியிலும் நிகழ்வுகள் நடைபெறும்.
2014ல் பிறந்த (1ம் ஆண்டு) மாணவர்களுக்கு ஆத்திசூடி வழங்கப்பட்டுள்ளது.
2013ல் பிறந்த (2ம் ஆண்டு) மாணவர்களுக்கு கொன்றைவேந்தன் வழங்கப்பட்டுள்ளது.
2012ல் பிறந்த (3ம் ஆண்டு) மற்றும் 2011ல் பிறந்த (4ம் ஆண்டு) மாணவர்களுக்கு நல்வழி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு நல்வழிகளில் ஒன்றைத் தெரிவுசெய்தல் போதுமானது.
அனைத்து பாடல் தொகுப்புக்களை இணைக்கப்பட்டுள்ள கோப்புக்களில் உள்ளன. மாணவர்கள் தங்களுக்கு உரிய கோப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆத்திசூடி,கொன்றைவேந்தன், நல்வழி போன்றன தழிழ்மொழியின் தொன்மையும் நீதி இலக்கணமும் போற்றிப் பேணப்பட வேண்டிய அவசியமுள்ளதால் புலம்பெயர் இளையவர்களின் மொழித்திறனைக் கருத்திற்கொண்டு சுருக்கி வழங்குகிறோம்.· மேலே கூறப்பட்ட நிகழ்வுகள் இடம்பெறும் காலத்தை அட்டவணையில் பார்வையிலாம், நிகழ்வுகள்
இணையமுற்றத்தில் இடம்பெறும் நேர அட்டவணை பின்னர் அறியத்தரப்படும்.அன்னையின் முகநூல் பக்க அறிவிப்பை இங்கே காணலாம்.
https://www.facebook.com/100010093008230/posts/1336869569992797/?d=n