Home

அறிவித்தல்

 

புதிய கல்வியாண்டு 2020-2021

அன்னைபூபதி தமிழ்ப்பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான முக்கிய தகவல்கள்!

அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களையும் புதியதோர் கல்வியாண்டில் வரவேற்கின்றோம். என்றும்போல் அன்னைத்தமிழை வளர்ப்பதுடன், இன்றய காலத்தில் கொறோனா நோய் தொற்று வராமல் தடுப்பதுமே இக்கல்வியாண்டின் நோக்கமாகும். அனைவரையும் கொரோனா சம்பந்தமான பொதுவிதிகளைக் கடைப்பிடிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூடம் தொய்யன் வளாககத்தின் புதிய கல்வியாண்டு ஆவணி 22 சனிக்கிழமை காலை 09:00 மணிக்கு ஆரம்பமாகும்.

Bryn பாடசாலை தற்போதைய நோய் தொற்றின் காரணமாக எமக்கு கிடைக்காததினால் எமது பாடசாலையின் வகுப்புக்கள் தமிழர் வள ஆலோசனை மையத்தில் தொடர்ந்து நடைபெறும்.

பாடசாலை மண்டபங்களிற்குள் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெற்றோர்கள் வாகனத்தரிப்பிடத்தில் பிள்ளைகளை இறக்கிவிட்டு பின் பாடசாலை முடிவடையும் நேரத்தில் வந்து கூட்டி செல்லலாம்.

வாகன தரிப்பிட பற்றாக்குறை உள்ளதால் பெற்றோர்கள் பாடசாலை சுற்றாடலில் வாகனங்களை நிறுத்த முடியாது.

பாடசாலை ஆரம்பமாகும் போது வகுப்பு ரீதியாக வாகனதரிப்பிடத்தில் குழுமியிருக்கும் (1 மீற்றர் தூரம்) மாணவர்களை ஆசிரியர்கள் அழைத்து செல்வார்கள்.

வகுப்பறைக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறை:

மழலையர்வகுப்பு, பாலர்வகுப்பு, ஆண்டு 1 - ஆண்டு 10 பாடசாலை முடிந்த பின்பும் இதே ஒழுங்கு வரிசையில் ஒவ்வொரு வகுப்பும் சில நிமிட இடைவெளிக்குப்பின் வெளியேறலாம்.

பாடசாலை மண்டபத்திற்குள் நுழையமுன் கிருமிநாசினியை/sprit கையில் பூசவேண்டும். வகுப்பறைகளிற்குள் சென்றவுடன் உங்கள் இருப்பிடங்களிற்கு (கதிரை மேசை) கிருமிநாசினியை பாவித்து துப்பரவு செய்தல் வேண்டும, அதேபோல் பாடசாலை முடிந்தபின்பும் உங்கள் இருப்பிடங்களை துப்பரவு செய்தல் வேண்டும் .

இடைவேளையின் போது மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள், உண்பதற்கான சிற்றூணடிகள் மற்றும் குளிர்பானங்களை மாணவர்கள் எடுத்து வேண்டும். மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

பாடசாலையிற்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தவிர்ந்த வேறு எவருக்கும் அனுமதியில்லை.

ஒன்றுகூடும் அனைவரும் தமக்கிடையே 1 மீற்றர் இடைவெளியை பராமரித்தல் வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்கள் பொருட்களையே பாவிக்கவேண்டும். ஒருவர் கையால் தொட்டதை அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் தொடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

புதிய மாணவர்களை இணைக்கவரும் பெற்றோர்கள் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் நிற்கவும்

பாடசாலையில் உள்ளே நிற்பவர்கள் தங்களுடய தொலைபேசி இலக்கம் மற்றும் பிற தொடர்புத் தகவல்களைப் பதிவிடுவதன் மூலம் அன்று சந்தித்தவர்களின் விபரம் சேகரிக்கப்பட வேண்டும். இத்தகவல்கள் நிர்வாகத்திடம் இருக்கவேண்டும். தேவை ஏற்படின் இவ்விபரம் சுகாதார ஆணையத்துக்கு தொற்றுநோயைக் கண்டறிய வழங்கப்படும்.

தொற்றுக்கட்டுப்பாட்டுப் பொறுப்பாளரின் வழிகாட்டுதல்களைப் புரிந்துகொண்டு அவர்களுடன் இணைந்து செயற்படவேண்டும்.

ஒவ்வொருவரும் தும்மும்போதும் இருமும்போதும் தங்கள் முழங்கையால் தடுக்கவேண்டும் அல்லது கைகுட்டைத் தாள்களைப் பயன்படுத்த வேண்டும், பின்பு கைகளைச் சோப்புப் போட்டு நன்றாகக் கழுவவேண்டும். கழிப்பறைக்குச் செல்பவர்கள் உள்ளே செல்லமுன்னும், வெளியே வரும்போதும் கிருமிநாசினியைக் கைகளில் எடுக்கவேண்டும். கைகளை நன்றாகக் கழுவவேண்டும்.

சுவாசம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோய், இருதயநோய், புற்றுநோய் சிகிச்சை எடுப்பவர்கள் மற்றும் ஏனைய நோய் தாக்கத்திற்கு உள்ள நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ;தங்கள் நிர்வாகத்திற்கு இதைத் தெரியப்படுத்தி அவர்களின் ஆலோசனை படி நடந்து கொள்ளவும்.

நோர்வேயில் கொரோனாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான, மேற்கூறிய தகவல்கள் யாவும் ஏற்கனவே நீங்கள் அறிந்தவையாக இருந்தாலும் இத்தகவல்களைத் தங்களுக்குத் தெரிவிப்பது பாடாசாலையின் கடமை.

நிருவாகம்

 

அறிவித்தல்

 

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அன்னை பூபதியின் நினைவு நாள்.இன்று நாம் இணைய முற்றத்தில் (இணைய வழிக் கல்வியில்) கால் எடுத்துவைத்துள்ளோம். எமக்கான எதிர்கால கல்வி வழிமுறைகளில் இணைய முற்றம் (இணையகல்வி) இணைந்து பயணிக்கும்.

மேலும் வாசிக்க ....

நிருவாகம்

அறிவித்தல்

 

14.03 - பாடசாலை நடைபெற மாட்டாது.

கடந்த இருவாரங்களாக நோர்வேயில் பரவிவரும் கொரோனா கிருமியின் தாக்கம், எங்களின் நாளாந்த வாழ்கையைப் பாதித்துள்ளது. நோர்வேயில் கொரோனா கிருமியால் ஏற்படும் பாதிப்புக்களை உடனுக்குடன் அறிய https://www.fhi.no/sv/smittsomme-sykdommer/corona/ 

இணையத்தளத்தை பார்வையிடவும்.

பல சிறுவர்களை ஓருங்கமைக்கும் எமது நிறுவனம் மிகவும் கவனமாகவும் பொறுப்புணர்வோடும் சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுகின்றோம்.

இவ்விடயம் சார்ந்து நோர்வே அரசு எடுக்கும் முடிவுகளை மதித்து நடந்துகொள்ளவேண்டும். சுகாதாரப்பிரிவின் முடிவுகளுக்கு ஒத்தவகையில் எமது கலைக்கூடமும் சில முடிவுகளை எடுக்கவேண்டிய கடமைக்கு உட்பட்டுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பபைக் கருத்தில் கொண்டு இவ்வாரம் சனிக்கிழமை 14.03.2020 பாடசாலை நடைபெற மாட்டாது.

நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுப்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் தேவையற்ற ஒன்று கூடல்கள், விருந்துபசாரங்களை தவிற்த்து பிள்ளைகளினதும் சக மனிதர்களினதும் உடல் நலத்தை கருத்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்.


நிருவாகம்

 

அறிவித்தல்

 

வருடாந்தப் பொதுக்கூட்டம் (Årsmøte)

வருடாந்தப் பொதுக்கூட்டம் பங்குனி மாதம் 07.03.20 அன்று காலை 11:15 மணிக்கு Brynskole இல் நடைபெறும்.

வருடாந்த பொதுக்கூட்டத்துக்குரிய நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நிருவாகம்

அறிவித்தல்

 

அன்னை தமிழ் முற்றப்போட்டிகள் 2020

அன்னை தமிழ் முற்றப்போட்டிகளில் சில போட்டிகள் எதிர்வரும் 29.02.2020 சனிக்கிழமை மதியம் 15:00 மணிக்கும் மற்றும் ஞாயிறு முற்பகல் 11:00 மணிக்கும் தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடைபெறும்.

29.02.2020 சனிக்கிழமை மதியம் 15:00மணி

 • சிறுவர் பேச்சு பிரிவு 1
 • சிறுவர் பேச்சு பிரிவு 2

01.03.2020 ஞாயிறு முற்பகல் 11:00மணி

 • சிறுவர் பேச்சு பிரிவு 3
 • சிறுவர் பேச்சு பிரிவு 4
 • சிறுவர் பேச்சு பிரிவு 5
 • கவிதை மொழிதல்(எல்லாப் பிரிவினர்)
 • பெரியவர்கள் கதை சொல்லுதல்

அன்னைத் தமிழ்முற்றப் போட்டிக்கு தெரிவாகிய மாணவர்கள் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.


நிருவாகம்

 

அறிவித்தல்

 

அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் 2020

*போட்டிகளுக்கான விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

*பேச்சுப்போட்டிகள் , மற்றும் PowerPoint presentasjon போட்டிகளில் வெற்றியீட்டியோர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.


நிருவாகம்

 

அறிவித்தல்

 

பேச்சுப் போட்டியும், பரிசளிப்பு வைபவமும் 2020

 • நேரம் :   10:00 மணி
 • காலம் :  15.02.2020 (சனிக்கிழமை)
 • இடம் :    மொட்டன்ஸ்றூட் வளாகம்
  • ( Steinbråten skole)

இறுதிப்போட்டிகள் நடைபெறும் வகுப்பு ஒழுங்கு:

வளர்நிலை 3, 2, 1, ஆரம்பம், ஆண்டு 4, 5, 6, 9, 7, 8.

பேச்சுப்போட்டிகள் , மற்றும் PowerPoint presentasjon நிறைவடைந்ததும் பரிசளிப்பு நிகழ்வு ஆரம்பமாகும்.

இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15.02.2020 சனிக்கிழமை வழமையான வகுப்புகள் நடைபெறமாட்டாது.

வருடாந்தப் பொதுக்கூட்டம் (Årsmøte)

வருடாந்தப் பொதுக்கூட்டம் பங்குனி மாதம் 07.03.20 அன்று காலை 11:15 மணிக்கு Brynskole இல் நடைபெற இருப்பதால் இக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணும் விடயங்கள், வினாக்கள் என்பவற்றை பெற்றோர்கள் 29.02.20 க்கு முன் எழுத்து மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ நிருவாகத்திடம் சமர்ப்பிக்கவும்.

அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் 2020

போட்டிகளுக்கான விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.


நிருவாகம்

 

அறிவித்தல்

 

பேச்சுப் போட்டிக்கான தெரிவுப்போட்டி 2020.

தொய்யன், மொட்டன்ஸ்றூட் மற்றும் ஒஸ்போல்ட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் பேச்சுப் போட்டிகளுக்கான தெரிவுப்போட்டி எதிர்வரும் 08.02 சனிக்கிழமை மதியம் 13.00 மணிக்கு தொய்யன் வளாகத்தில் (BrynSkole) நடைபெறும். தெரிவுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 12.45 மணிக்கு முன்னர் வளாகத்தில் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். இறுதிப்போட்டி 15.02 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மொட்டன்ஸ்றூட் வளாகத்தில் நடைபெறும்.

தெரிவுப்போட்டியில் பங்குபற்றுபவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 08.02.2020 சனிக்கிழமை அன்று வழமையான வகுப்புகள் நடைபெறும்.

நிருவாகம்

அறிவித்தல்

 

பெற்றோர் கூட்டம்

பெற்றோர் கூட்டம் 04.01 சனிக்கிழமை காலை 11:15 மணிக்கு நடைபெறும், அன்று பேச்சுப்போட்டி தொடர்பான மேலதிக தகவல்கள் வழங்கப்படும்.

கல்வியற் போட்டிகளிற்கான பேச்சுப்போட்டிகள்.

மாணவர்களிற்கான பேச்சுத்தாள்கள் எதிர்வரும் 04.01 சனிக்கிழமை வகுப்புக்களில் வழங்கப்படும், தெரிவுப்போட்டி 08.02 அன்றும் இறுதிப்போட்டி 15.02 அன்றும் நடைபெறும்.

தமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா) 2020

எதிர்வரும் 18.01.2020 சனிக்கிழமை 11:30 மணிக்கு நடைபெற இருக்கும் தமிழர் வள ஆலோசனை மையம், அன்னை பூபதி வளாகங்கள் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம். இவ் விழா எமது பிள்ளைகளிற்கு எமது பண்பாடு கலாச்சாரத்தை கொண்டு செல்லும் நோக்குடன் நடாத்தப்படும் நிகழ்வாகும் எனவே நிச்சயமாக எல்லோரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இடம்:

15 Oslo Kristne Senters lokaler, Trondheimsveien 50G, 2007 Kjeller.

நிருவாகம்

அறிவித்தல்

நத்தார் விழா 2019

14.12.2019 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு எமது பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் நடபெறும். அத்துடன் ஓவியம், உறுப்பெழுத்து, கட்டுரை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு வைபவமும் மற்றும் சென்ற கல்வியாண்டில் தரம் 10 நிறைவுசெய்து வெளியேறிய மாணவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கப்படும்.

நத்தார் விழாவை அடுத்து வகுப்புகளில் மாணவர்களிற்கான தேற்சியறிக்கை வழங்கப்படும்.

14.12.2019 சனிக்கிழமையன்றே இக்கல்வியாண்டின் இறுதி நாளாகும்.

அங்கத்தவர் கட்டணத்தை இன்னும் சிலர் செலுத்தாமல் உள்ளீர்கள், கட்டணத்தை செலுத்துவதற்கான இறுதி நாள் 31.12.2019 அகும், செலுத்தாதவர்கள் எதிர்வரும் கல்வியாண்டிலிருந்து உங்கள் அங்கத்தவர் சலுகையை இழக்கநேரிடும்.

நிருவாகம்

 

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo