Home

அறிவித்தல்

 

அரையாண்டு தேர்வு

மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு சனிக்கிழமை 07.12 அன்று நடைபெறும்.

பிரத்தியேக பெற்றோர் கூட்டம்

பெற்றோர்களுக்கான பிரத்தியேக கூட்டம் சனிக்கிழமை 07.12, காலை11:15 மணிக்கு நடைபெறும்.

கல்வியற் போட்டிகளின் முடிவுகள்

உறுப்பெழுத்து, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றியீட்டியோர் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நிருவாகம்

 

அறிவித்தல்

 

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டி 2019.

ஓவியப்போட்டிகள். சனிக்கிழமை 09.11.19 அன்று நடைபெறும்.

போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்ட தலைப்புக்கள்:

பிரிவு 1 (வகுப்பு  5, 6 )

  • தமிழீழத்தின் அழகு அல்லது
  • மாவீரர் துயிலுமில்லம்

பிரிவு 2 (வகுப்பு  7, 8 )

  • தமிழீழப் பகுதிகளில் அபிவிருத்தியும் வள சுரண்டல்களும் அல்லது
  • நீராவியடிப் பிள்ளையாரும் பௌத்தமதமாக்கலும்

பிரிவு 3 (வகுப்பு  9, 10 )

  • உலகம் அழித்த குறியீடு முள்ளிவாய்க்கால் அல்லது
  • கின்னியா வென்னீர்ஊற்றும் பௌத்தமதமாக்கலும்

பிரிவு 4 (வகுப்பு  11 )

  • தமிழர்களின் மறைக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்கள், அல்லது
  • மாவீரர் நாளும் தமிழீழத்தின் இன்றைய சூழலும்

நிருவாகம்

அறிவித்தல்

 

நவராத்திரி விழா

12.10.19சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு எமது பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகும். விழாவின் பின் வழமையான வகுப்புக்கள் 11:15 - 12:30 மணிவரை நடைபெறும். இவ் விழாவிற்கான நிகழ்ச்சிகளை வகுப்பு-4, வகுப்பு-7 மற்றும் வகுப்பு-8 மாணவர்கள் இணைந்து நடத்த உள்ளார்கள். நிகழ்ச்சிகளிற்கான ஒத்திகைகள் 11.10.19 வெள்ளிக்கிழமை 18:00 மணிக்கு Bryn பாடசாலையில் நடை பெறும்.

பெற்றோர்களே !.. நவராத்திரி விழாவிற்கு தேவையான பொங்கல், அவல் மற்றும் சுண்டல் என்பவற்றை செய்து கொடுத்து 4ம், 7ம், 8ம் வகுப்பு பெற்றோருக்கு ஒத்துழைப்பை வழங்கி இவ்விழாவை சிறப்பிற்போம்.

நிருவாகம்

 

அறிவித்தல்

 

வகுப்பறைச்சந்திப்புக்களின் நேர அட்டவணை:

21.09.19 சனிக்கிழமை

ஆண்டு   5, 6 -  மணி   10:00

ஆண்டு   3    -   மணி   11:15

பெற்றோர்களின் கவனத்திற்கு: நடைபெறும் வகுப்பறை சந்திப்புக்களில் தவறாது பங்குகொள்ளவும்.

நிருவாகம்

அறிவித்தல்

 

நீரிழிவு நோய் தொடர்பான கலந்துரையாடல்

எதிர்வரும் 14.09 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு நீரிழிவு நோய் தொடர்பான கலந்துரையாடலும் அதன் பின்பு குருதிப் பரிசோதனைக்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடல் நோர்வே தமிழர் சுகாதார அமைப்பின் வைத்தியதுறையில் இறுதி ஆண்டு மாணவியான ராகினி மேகநாதன் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நிருவாகம்

அறிவித்தல்

 

11ம் ஆண்டுக்கான வகுப்பு

மாணவர்களின் தமிழ் ஆளுமையை மேன் மேலும் வளர்ச்சியடைய செய்யும் நோக்கத்துடன் எமது வளாகத்தில் 11ம் ஆண்டுக்கான வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ் வகுப்பு சனிக்கிழமை 07.09.2019, மதியம் 12:30 மணிக்கு ஆரம்பமாகும். வகுப்பு நேரம் சனிக்கிழமைகளில், 12:30 - 14:30 வரை நடைபெறும்.

இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் toyenannai@gmail.com என்ற மின்னஞ்சலில் உங்கள் பெயர், தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்து கொள்ளவும்.

11ம் ஆண்டு பெற்றோர்களிற்கான சந்திப்பு சனிக்கிழமை 31.08.2019 காலை 10.00 மணிக்கு நடைபெறும்.

நிருவாகம்

அறிவித்தல்

 

புதிய கல்வியாண்டு 2019-2020

எதிர்வரும் 24.08.19 சனிக்கிழமை, 09.30 மணிக்கு ஆரம்பமாகும்.

அன்பான மாணவச் செல்வங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களே மீண்டுமோர் புதிய கல்வியாண்டில் தமிழ் மொழியாம் தாய்மொழியை எமது சந்ததியினருக்கு கொண்டு சென்று எம் மொழியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையில் உள்ளோம். தாய்மொழியே நம் பண்பாட்டின் வழியும் நம் அடையாளமுமாகும் ஆதலால் தமிழ் மொழியை வளர்ப்பதற்காய் தமிழ்க்கல்வியை கற்றிடுவோம் வாரீர் வாரீர் !.

  • பாடசாலை கொடி ஏற்றல் நிகழ்வோடு வகுப்புக்கள் ஆரம்பமாகும்.
  • புதிய மாணவர்களை இணைத்தல் காலை 10:00 மணி.

பாட நூல்கள் வழமைபோல் வகுப்புக்களில் விற்பனை செய்யப்படும். மாணவர்களுக்கு தேவையான பாட நூல்களின் விபரத்தையும் அதற்கு உரிய பணத்தையும் கடிதஉறையில் வைத்து மாணவர்களிடம் கொடுத்து அனுப்பி வைக்கவும். பாடநூல்கள் வகுப்பறைகளில் விநியோகிக்கப்படும்.

சென்ற கல்வியாண்டில் எம்முடன்; உறுதுணையாக இருந்து அனைத்து உதவிகளையும் அளித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கும் எமது அன்புகலந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

நிருவாகம்

அறிவித்தல்

 

தேர்வு

01.06.2019 சனிக்கிழமை அன்று அனைத்துலகத் எழுத்துத்தேர்வுகள் காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகும். பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் 30 நிமிடங்களிற்கு முன் சமூகம் அளித்தல் வேண்டும்.

மழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலக தேர்வுக்கு விண்ணபிக்காதவர்களுக்கும் வழமையான வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.

இல்லவிளையாட்டுப்போட்டிகள் 2019

தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப் போட்டிகளுக்கான அரை இறுதிப்போட்டிகள் 01.06 சனிக்கிழமை 16:00 மணிக்கும், இறுதிப்போட்டிகள் 02.06 ஞயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கும் Lambertseter friidrettsbane இல் ஆரம்பமாகும்.

பங்குபற்றுவோர் விபரங்கள் இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது...

01.06 சனிக்கிழமை அன்று நடைபெறும் சுவட்டு தெரிவு, நீளம் பாய்தல் (இறுதி) போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்கள் விபரமும் இணைக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் பங்கேற்கும் மாணவர்களுக்கான பயிற்சிகள் நடைபெறும் நாட்கள் (Lambertseter friidrettsbane):

26.05.2019   -   16:00 - 18:00

30.05.2019   -   16:00 - 18:00

31.05.2019   -   16:00 - 18:00

பெரும்பாலோனோர் விளையாட்டுப்போட்டிகளிற்கான பதிவுகளை செய்தும் அங்கத்தவர் கட்டணம் 100 குறோண்களை இன்றும் செலுத்தாது உள்ளீர்கள். எனவே கட்டணங்களை விரைவாக செலுத்தவும்.VIPPS nr. 22052 கட்டணத்தை செலுத்தும் போது குடும்ப இலக்கத்தை குறிப்பிடவும்.

 நிருவாகம்

 

அறிவித்தல்

 

பெற்றோர் கூட்டம்.

பெற்றோர் கூட்டம் 11.05 சனிக்கிழமை காலை 11:15 மணிக்கு நடைபெறும்,.

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2019

வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் (முகவரி)) அங்கத்தவர் கட்டணம் 100 குறோணர்களை வங்கியினுடாகவோ (1602 56 23480) அல்லது Vipps (22052) முறையிலோ செலுத்தியிருத்தல் வேண்டும். பதிவுகளுக்கான இறுதி திகதி 13.05.19.

நிருவாகம்

அறிவித்தல்

 

புலன்மொழி வளத்தேர்வு

04.05.19 சனிக்கிழமை வாய்மொழித்தேர்வு நடைபெற உள்ளதால் மழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலக தேர்வுக்கு விண்ணபிக்காதவர்களுக்கும் வழமையான வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.

கீழே தரப்பட்டுள்ள நேரஅட்டவணை அண்னளவாகவே போடப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை மற்றும் தேர்விற்கு பாவிற்கும் நேரங்களுக்கு ஏற்ப தேர்வு தொடங்கும், முடியும் நேரங்கள் அமையும்.

தேர்வுக்கான வகுப்பு ஒழுங்குகளும் தேர்வு ஆரம்பமாகும் நேர அட்டவணையும் :

ஆண்டு 1, 2, 3     -   08:45

ஆண்டு 4, 5, 6     -   10:15

ஆண்டு 7, 8         -   11:00

ஆண்டு 9, 10        -   12:00

பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும் மேற் தரப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாக சமூகம் தரவேண்டும்.

அனைத்துலகத்துலக எழுத்துத்தேர்வு 01.06.19 சனிக்கிழமை அன்று நடைபெறும்.

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2019

தொய்யன், மொட்டன்ஸ்றூட், ஒஸ்போல்ட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 02.06.19 ஞாயிற்றுக் கிழமை Lambertseter friidrettsbane விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் (முகவரி) அங்கத்தவர் கட்டணம் 100 குறோணர்களை வங்கியினுடாகவோ (1602 56 23480) அல்லது Vipps (22052) முறையிலோ செலுத்தியிருத்தல் வேண்டும். பதிவுகளுக்கான இறுதி திகதி 13.05.19.

இவ்வருடம் இன அழிப்பு நாளான 18.05.19 ஐ எமது வளாகத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் நிருவாகம் இணைந்த நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்களினதும் மற்றும் ஆசிரியர்களினதும் நிகழ்வுகள் நடைபெறும். நிகழ்வுகளிற்கான பயிற்சிகள் சனிக்கிழமைகளில் வகுப்புக்கள் முடிந்த பின் நடைபெறும். நிகழ்வுகளை வகுப்பாசிரியர்கள் ஒருங்கமைப்பார்கள்.

நிருவாகம்

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo