மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு சனிக்கிழமை 01.12.2018 அன்று நடைபெறும்.
நத்தார் விழா
08.12.18 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு எமது பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் நடபெறும். அத்துடன் ஓவியம், உறுப்பெழுத்து, கட்டுரை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு வைபவமும் மற்றும் சென்ற கல்வியாண்டில் தரம் 10 நிறைவுசெய்து வெளியேறிய மாணவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கப்படும்.
நத்தார் விழாவை அடுத்து வகுப்புகளில் மாணவர்களிற்கான தேற்சியறிக்கை வழங்கப்படும்.
08.12.2018 சனிக்கிழமையன்றே இக்கல்வியாண்டின் இறுதி நாளாகும்.
அங்கத்தவர் கட்டணத்தை இன்னும் சிலர் செலுத்தாமல் உள்ளீர்கள், கட்டணத்தை செலுத்துவதற்கான இறுதி நாள் 31.12.2018 அகும், செலுத்தாதவர்கள் எதிர்வரும் கல்வியாண்டிலிருந்து உங்கள் அங்கத்தவர் சலுகையை இழக்கநேரிடும்.
தமிழர் திருநாள்
வழமைபோல் இம்முறையும் "அறிவு முற்றம்" போட்டி நிகழ்ச்சி இடம்பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆண்டு 6 + 7, ஆண்டு 8 + 9, ஆண்டு 10 என மூன்று பிரிவுகளாக போட்டிகள் இடம்பெறவுள்ளதால், இவ் வருடமும் கடந்த வருடங்கள் போன்று தகுதிகாண் பரீட்சை 01.12.18 சனிக்கிழமை அன்று நடைபெறும், இதில் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
தமிழர் வள ஆலோசனை மையத்தினூடாக எதிர்வரும் 03.11.18 சனிக்கிழமை11:10 மணிக்கு எமது வளாகத்தில் பெற்றோர்களிற்காக (குறிப்பாக பெண்களிற்காக) புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தாடல் ஆராய்ச்சியாளர் வைத்தியர் ரஜிதா அவர்களால் நடாத்தப்பட உள்ளது. அனைவரும் இதில் பங்கேற்று பயனடையும் படி கேட்டுக் கொள்கிறோம்.
மாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டி.2018 சனிக்கிழமை 10.11.18 அன்று நடைபெறும்.
போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்ட தலைப்புக்கள்:
பிரிவு 1 (வகுப்பு 5, 7 )
தமிழீழ தேசியசின்னங்களில் ஒன்று அல்லது
நடுகல் வழிபாடு
பிரிவு 2 (வகுப்பு 7, 8 )
மாவீரர் துயிலுமில்லம் அல்லது
முள்ளிவாய்க்கால் பேரவலம்
பிரிவு 3 (வகுப்பு 9, 10 )
நல்லூரில் அமைந்திருந்த தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி அல்லது
ஈழத்தமிழர் நில அபகரிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும்
சனிக்கிழமை 03.11.18 அன்று பாடசாலை.12:00 மணியுடன் நிறைவடையும்.
எதிர்வரும் 27.10.18 சனிக்கிழமை கல்வியற் போட்டிகளிற்கான உறுப்பெழுத்து மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடைபெறும்.
போட்டிகளுக்கான விதிமுறைகள் கீழ்வருமாறு:
உறுப்பெழுத்துப்போட்டி
வளர்நிலை ஆண்டு 1 - 5 மாணவர்களுக்கு எம்மால் வழங்கப்படும் சொல்லியத்தையோ அன்றி சொற்றொடரையோ பார்த்து எழுதுதல் வேண்டும்.
கட்டுரைப்போட்டி
ஆண்டு 6 - 10 மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெறும். இவ்விடயம் மேல் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் கல்விக்கு உதவும் வகையிலும் எழுத்தாற்றலைத் தூண்டும் நோக்குடனும் எம்மால் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டு 6ம் ஆண்டு மாணவர்களின் கட்டுரைக்கான தலைப்பு ஏற்கனவே வகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது அதை பயிற்ச்சி செய்து எதிர்வரும் சனிக்கிழமை வகுப்பில் எழுதுதல் வேண்டும்..
ஆண்டு 7 - 10ம் ஆண்டு மாணவர்களின் கட்டுரைக்கான தலைப்புக்கள் இதுவரை பாடசாலையில் பயின்ற கட்டுரைகளின்; தலைப்பு ஒன்று எதிர் வரும் சனிக்கிழமை வகுப்பில் கொடுக்கப்படும்..
கட்டுரை எழுதும் மாணவர்களின் கவனத்துக்கு:
6ம் ஆண்டு : 75 சொற்கள்
7 - 8ம் ஆண்டு : 90 சொற்கள்
9 - 10ம் ஆண்டு : 125 சொற்கள்
உறுப்பெழுத்து மற்றும் கட்டுரை போட்டிகளுக்கன விதிமுறைகள்::
வளாகத்தால் வழங்கப்படும் தாளில் மாத்திரம் எழுதுதல் வேண்டும்..
எழுதுகோல் (கரிக்கோல்) பாவித்தல் வேண்டும்.
புள்ளிகள், அடையாளங்கள் முக்கியமாகக் கவனத்தில் எடுக்கப்படும்.
வழங்கப்படும் நேரத்துக்குள் முடிக்க வேண்டும்..
பிறமொழிகளில் எழுதுவதை தவிர்த்து தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
வழங்கப்படும் தாளின் பின்புறத்தில் உங்கள் சுட்டெண் மட்டும் எழுதுதல் வேண்டும்.
ஒவ்வொரு வகுப்புக்கும் அந்தந்த வகுப்பாசிரியரே நடத்துநராகக் கடமைபுரிவார்.
ஓவியப் போட்டி 2018 ல் வெற்றியீட்டியோர் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13.10.2018 சனிக்கிழமை எமக்கு Brynskole இல் அனுமதி கிடைக்கவில்லை எனவே வழமையான வகுப்புக்கள் தமிழர் வள ஆலோசனை மையத்தில் (றொம்மன் வாளாகத்தில்) காலை 09:00 - 12:00 மணி வரை நடைபெறும்.
நவராத்திரி விழா 13.10.2018 சனிக்கிழமை நடைபெறும். நவராத்திரி விழாவிற்கான நிகழ்ச்சிகளை 4 ம், 5 ம் வகுப்பு மாணவர்கள் இணைந்து நடாத்த உள்ளார்கள். இவ் விழாவிற்கு அனைத்து பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இக்கல்வியாண்டின் இலையுதிர்கால விடுமுறையில் மாணவர்களுக்கான குடில்பயணம் ஒன்று அன்னை தலைமை நிர்வாகத்தினால் ஒழுங்கமைக்குப்பட்டுள்ளது. இப்பயணம் ஐந்தாம் வகுப்பிக்கும், அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இப்பயணத்தில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் தங்கள் பெயர்களை வகுப்பாசிரியரிடம் 18.09.2018 ம் திகதிக்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். கூடுதலான மாணவர்கள் பதிவு செய்யும் வேளையில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இப்பயணம் தொடர்பான மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வகுப்பறைச்சந்திப்புக்களின் நேர அட்டவணை:
15.09.18சனிக்கிழமை
ஆண்டு 4, 5 - மணி 10:15
ஆண்டு 6, 7 - மணி 11:30
22.09.18சனிக்கிழமை
ஆண்டு 8 - மணி 10:15
ஆண்டு 9 - மணி 11:30
29.09.18சனிக்கிழமை
ஆண்டு 1, 10 - மணி 10:15
பெற்றோர்களின் கவனத்திற்கு: தொடர்ந்து நடைபெறும் வகுப்பறை சந்திப்புக்களில் தவறாது பங்குகொள்ளவும்.
அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களையும் இப்புதிய கல்வியாண்டிற்கு வரவேற்று கொள்வதோடு இக்கல்வியாண்டு அனைவருக்கும் இனிதாக அமையவும் பெரும் வளர்ச்சியை அளிக்கவும் வாழ்த்துக்கள்.
சென்ற கல்வியாண்டில் எம்முடன் உறுதுணையாக இருந்து அனைத்து உதவிகளையும் அளித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எமது அன்புகலந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
புதிய கல்வியாண்டு 25.08.2018 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகும். பாடநூல்கள் 10:00 மணி தொடக்கம் இரண்டாம் அடுக்கில் விற்க்கப்படும் மற்றும் புதிய மாணவர்களுக்கான பதிவு 10:00 மணிக்கு ஆரம்பமாகும்.
25.08.18 சனிக்கிழமை ஆசிரியர்கூட்டம் நடைபெறவுள்ளதால் பாடசாலை மதியம் 12:00 மணியுடன் நிறைவடையும்.
02.06.2018 சனிக்கிழமை அன்று அனைத்துலகத் எழுத்துத்தேர்வுகள் காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும். பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் 30 நிமிடங்களிற்கு முன் சமூகம் அளித்தல் வேண்டும்.
மழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலக தேர்வுக்கு விண்ணபிக்காதவர்களுக்கும் வழமையான வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.
இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2018
தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 03.06.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 10:00 மணிக்கு Stovner banen இல் ஆரம்பமாகும்.
நடைபெறவிருக்கும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகளளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பயிற்சிகள் நடைபெறும் நாட்கள்:.
30.05.2018 - 18:30 - 20:30
31.05.2018 - 20:30 - 20:30
அங்கத்தவர் கட்டணம் 100 குறோண்கள் செலுத்தவேண்டிய வங்கி இல: 1602.56.23480 கட்டணத்தை வங்கியூடாகச் செலுத்தும் போது குடும்ப இலக்கம் அல்லது மாணவர் இலக்கத்தை குறிப்பிடவும்.