புலன்மொழி வளத்தேர்வு
வகுப்புகள் 3, 4, 5 பெற்றோர்களுக்கான அறிவித்தல், 2018 ஆண்டிற்கான புலன்மொழி வளத்தேர்வு பேசுதலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மாணவர்களுக்கு மூன்று தலைப்புகள் கொடுக்கப்படும். அவற்றிலிருந்து மாணவர் ஒரு தலைப்பைத் தெரிவுசெய்து அது தொடர்பான விடையங்களை ஆயத்தம் செய்வதற்கு தேவையான நேரம் வளங்கப்படும். பின்னர் மாணவர்கள் தெரிவு செய்த தலைப்பின் கீழ் ஆசிரியர்களால் ஐந்து வினாக்கள் கேட்கப்படும்.
இம்மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் தலைப்புகள், அவர்களின் பாடப்புத்தகங்களிலிருந்தும் பயிற்சிப்புத்தகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட தலைப்புகளாகவே இருக்கும். ஆகவே அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வரும் சனிக்கிழமை ஆசிரியர்களும் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம்.
05.05.18 சனிக்கிழமை வாய்மொழித்தேர்வு நடைபெற உள்ளதால் மழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலக தேர்வுக்கு விண்ணபிக்காதவர்களுக்கும் வழமையான வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.
கீழே தரப்பட்டுள்ள நேரஅட்டவணை அண்னளவாகவே போடப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை மற்றும் தேர்விற்கு பாவிற்கும் நேரங்களுக்கு ஏற்ப தேர்வு தொடங்கும், முடியும் நேரங்கள் அமையும்.
தேர்வுக்கான வகுப்பு ஒழுங்குகளும் தேர்வு ஆரம்பமாகும் நேர அட்டவணையும் :
ஆண்டு 1, 2, 9 - 08:45
ஆண்டு 8, 10 - 09:45
ஆண்டு 6, 7 - 11:00
ஆண்டு 5, 4, 3 - 12:15
பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும் மேற் தரப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாக சமூகம் தரவேண்டும்.
அனைத்துலகத்துலக எழுத்துத்தேர்வு 02.06.18 சனிக்கிழமை அன்று நடைபெறும்.
இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2018
தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 02.06, 03.06-2018 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும்.
வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் அங்கத்தவர் கட்டணத்தை வளாக அலுவலகத்திலோ அன்றி வங்கியினுடாகவோ செலுத்தியிருத்தல் வேண்டும்.
மாணவர்களின் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
நிருவாகம்