ஆண்டு விழா ஒத்திகைகள்
எதிர்வரும் 21.10.17 சனிக்கிழமை நிகழ்வுகளிற்கான ஒத்திகைகள் நடைபெறும்.
கீழே தரப்பட்டுள்ள நேர அட்டவணை ஒத்திகைகளுக்கு பாவிற்கும் நேரங்களுக்கு ஏற்ப தொடங்கும், முடியும் நேரங்கள் அமையும்.
வகுப்பு ஒழுங்குகளும் நேர அட்டவணையும் :
ஆண்டு 10, 11, 7, 4 - 10:00 மணி
மழலையர், ஆரம்பம் - 10:00 மணி
ஆண்டு 1, 2, 3, 5 - 11:00 மணி
ஆண்டு 6, 8, 9 - 11:45 மணி
இடம் : மொட்டன்ஸ்றூட் வளாகம் ( Steinbråten skole)
குறிப்பு: ஒத்திகை நடைபெறும் மட்டபத்தினுள் அந்த அந்த வகுப்பு மாணவர்களும் வகுப்பு ஆசிரியர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்..
21.10.2017 சனிக்கிழமை அன்று வழமையான வகுப்புக்கள் நடை பெறமாட்டாது.
ஆண்டு விழா சனிக்கிழமை மாலை 15:00 மணிக்கு ஆரம்பமாகும், விழாவில் பங்கேற்கும் மாணவர்களிற்கான ஒப்பனை அன்று மதியம் 12:00 மணி முதல் நடைபெறும், மேலதிக விபரங்களுக்கு வகுப்பு ஆசிரியர்களுடன் தொடர்புகொள்ளவும்.
எமது இவ் விழாவினை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு, பெற்றோர்களே ! உங்களது முழு ஆதரவையும் எதிற்பார்த்து நிற்கின்றோம். உங்கள் கடமைகள் என்ன என்பதை பெற்றோர் குழுவை அணுகி தெரிந்து கொள்ளவும்.
நிருவாகம்