புதிய கல்வியாண்டு 2017
பாடசாலை 07.01.2017 சனிக்கிழமை அன்று: 9:30 மணிக்கு ஆரம்பமாகும்.
தமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா) 2017
தமிழர் வள ஆலோசனை மையம், அன்னை பூபதி வளாகங்கள் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா) காலம்: 14.01.2017 - 11:30க்கு, இடம்: Oslo Kristne Senters lokaler, Trondheimsveien 50G, 2007 Kjeller. இல் நடைபெறவுள்ளது.
கேள்வி - பதில் போட்டி நிகழ்ச்சி
கடந்த தைப்பொங்கல் விழாவில் இடம் பெற்றது போன்று இந்தத் தடவையும் "அறிவு முற்றம்" போட்டி நிகழ்ச்சி இடம் பெறும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். கடந்த தடவை போன்று வெற்றிக் கிண்ணத்துடன் (சுற்றுக் கிண்ணம்) பெறுமதி மிக்க பரிசில் மாணவர்களுக்கு காத்திருக்கிறது. இந்த தடவை மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கோடு மூன்று பிரிவுகளாக "அறிவு முற்றம்" இடம்பெறவுள்ளது.
விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..
அனைவருக்கும் எமது ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள் !.
நிருவாகம்