Home

அறிவித்தல்

 

ஓவியம்வரைதல் வர்ணம் தீட்டுதல் பயிற்சி வகுப்புகள்

அனுபவமும்,ஆளுமையும் உடைய போலந்து நாட்டுப் பெண்மணியால் நடாத்தப்பட இருக்கும் ஓவியம்வரைதல், வர்ணம் தீட்டுதல் பயிற்சி வகுப்புக்கள்.

Edith Stylo, scenograf og kostymedesigner av yrke, er kursinstruktør. Hun er også kunstner, primært tegner, og har vært medlem av Tegneforbundet siden 2000, og har mange holdt utstillinger både inn - og utland. Edith har bakgrunn som NRK-scenograf.

காலம்: 04.10, 05.10, 06.10.-2016

 இடம்: தமிழர் வள ஆலோசனை மையம்.

 

விண்ணப்ப முகவரி மற்றும் மேலதிக தகவல்களுக்கு:

மேலதிக தகவல்களுக்கு

நிருவாகம்

 
 
 

அறிவித்தல்

 

நவராத்திரி விழா

01.10.16 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகும். விழாவின் பின் வழமையான வகுப்புக்கள் 11:15 - 13:00 மணிவரை நடைபெறும். இவ் விழாவிற்கான நிகழ்ச்சிகளை வகுப்பு-4 மற்றும் வகுப்பு-7 மாணவர்கள் இணைந்து நடத்த உள்ளார்கள். நிகழ்ச்சிகளிற்கான ஒத்திகைகள் 30.09.16 வெள்ளிக்கிழமை 19:00 மணிக்கு Bryn பாடசாலையில் நடை பெறும்.

பெற்றோர்களே !.. நவராத்திரி விழாவிற்கு தேவையான பொங்கல், அவல் மற்றும் சுண்டல் என்பவற்றை செய்து கொடுத்து 4ம், 7ம் வகுப்பு பெற்றோருக்கு ஒத்துழைப்பை வழங்கி இவ்விழாவை சிறப்பிற்போம்.

எதிர்வரும் 08.10.16 சனிக்கிழமை அன்று இலையுதிர்கால விடுமுறை, வழமையான வகுப்புக்கள் மீண்டும் 15.10.16 சனிக்கிழமை ஆரம்பமாகும்.

நோர்வேஜிய பாடசாலை நிருவாகத்தினரால் 22.10.16 சனியன்று Brynskole இல் தமிழ் வகுப்புக்கள் நடாத்துவதற்கு அனுமதி கிடைக்காத காரணத்தால் !, 22.10.16 சனியன்று வகுப்புக்கள் அனைத்தும் வழமையான நேரத்திற்கு தமிழர் வள ஆலோசனை மையத்தில் (அன்னை பூபதி றொம்மன் வளாகத்தில்) நடைபெறும்.

நிருவாகம்

 

அறிவித்தல்

 

வகுப்பறைச்சந்திப்புக்களின் நேர அட்டவணை:

24.09.16 சனிக்கிழமை

ஆண்டு   1 -  மணி   10:00

ஆண்டு   9 - மணி    10:15

ஆண்டு 10 - மணி    11:20

 

ஆசிரியர் கூட்டம் எதிர்வரும் 24.09.16 சனிக்கிழமை அன்று ஆசிரியர் கூட்டம் நடைபெறவுள்ளதால் பாடசாலை 12.00 மணியுடன் முடிவடையும்.

நிருவாகம்

 

அறிவித்தல்

 

கல்வியல் போட்டிகள்:

கல்வியல் போட்டிக்கான உறுபெழுத்து ஓவியம் கட்டுரைப் போட்டிகள் 17.09.16 சனிக்கிழமை நடைபெறும். அதற்கான விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது.

வகுப்பறைச்சந்திப்புக்களின் நேர அட்டவணை:

17.09.16 சனிக்கிழமை

ஆண்டு 6 - மணி   10:15

ஆண்டு 8 - மணி   11:20

24.09.16 சனிக்கிழமை

ஆண்டு   1 -  மணி   10:00

ஆண்டு   9 - மணி    10:15

ஆண்டு 10 - மணி    11:20

 

நவராத்திரி விழா 01.11.16 சனிக்கிழமை அன்று நடைபெறும். விழாவிற்கான நிகழ்ச்சிகளை வகுப்பு-4 மற்றும் வகுப்பு-7 மாணவர்கள் இணைந்து நடாத்துவர். நிகழ்ச்சிகளிற்கான ஒத்திகைகள் 16.09, 23.09, 30.09 வெள்ளிக்கிழமைகளில் 19:00 மணிக்கும், 17.09, 24,09 சனிக்கிழமைகளில் பாடசாலை நிறைவடைந்த பின்பும் நடை பெறும்.

பெற்றோர்களே !.. நவராத்திரி விழாவிற்கு தேவையான பொங்கல் அவல் மற்றும் சுண்டல் என்பவற்றை செய்து கொடுத்து 4ம், 7ம் வகுப்பு பெற்றோருக்கு ஒத்துழைப்பை வழங்கி இவ்விழாவை சிறப்பிற்போம்.

நிருவாகம்

 

அறிவித்தல்

 

மழலையர், ஆரம்ப வகுப்புகள்:

மழலையர் மற்றும் ஆரம்ப வகுப்புகள் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை நிறைவடையும் நேரம் வரை படசாலையில் நிற்க்கும்படி கேட்டுக் கொள்வதோடு இவ்விரு வகுப்புகளும் மதியம்12:00 மணியுடன் நிறைவு பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

வகுப்பறைச்சந்திப்புக்களின் நேர அட்டவணை:

10.09.16 சனிக்கிழமை

ஆண்டு 3 - மணி  10:00

ஆண்டு 5 - மணி  10:15

ஆண்டு 7 - மணி  11:20

சென்ற கல்வியாண்டிற்கான தவணைக்கட்டணம் மற்றும் அங்கத்துவர் கட்டணங்களை இதுவரையில் கட்டாதவர்கள் விரைவாக செலுத்தவும்.

கட்டிட நிதி பற்றுச்சீட்டை பெற்றவர்கள் உங்களால் முடிந்த தொகையை மாதத் தவணையில் செலுத்தும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 நிருவாகம்

பெற்றோர் கூட்டம்

 

எதிர்வரும் 03.09.2016 சனிக்கிழமை 11:15 மணிக்கு பெற்றோர் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைவரையும் தவறாது சமுகமளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வகுப்பறைச் சந்திப்பு

அன்புடையீர் ! மாணவர்களின் நலன் கருதி ஒழுங்குசெய்யப்படும் வகுப்பறைச் சந்திப்பிற்க்கு பெற்றோர்களாகிய நீங்களே அதிமுக்கியமானவர்கள். அன்பான பெற்றோர்களே பொழுதின்மை என்பது அனைத்துப் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் முக்கிய விடயமாக இருப்பதை அனைவரும் உணர்வோம். ஆனால், மாணவர்களின் கல்வித்தேவை அதிலும் அதிமுக்கிய தேவையாக இருக்கின்றதென்பதை அன்போடு வலியுறுத்துகின்றோம். எனவே வகுப்பறைச் சந்திப்புக்குத் தவறாது சமுகமளிக்கவும்.

 நிருவாகம்

பாடசாலை ஆரம்பம்

 

தமிழ்மொழியை தாலாட்ட - நாம்

தாலாட்டி வந்த செல்வங்களே!

களைதாண்டி கலாச்சரத்தையும்

கண்ணான கல்வியையும்

சாராய்ப் பிழிந்து ஊட்டிவிட்டே

உமை நாம் உயர்க்க,

அடுத்தோர் ஆண்டு நெருங்கிட்டு

அகிலமெல்லாம் தமிழ்ச்சிறப்பை

பரப்பிடும் பரவசம்

ஆலயம் ஒன்றை அமைக்கட்டும்-

தாய்மொழிக்காய் எம் உள்ளத்தில்

தொடரும் ஆண்டென்ன,

ஆயுள்கள் தமிழுடன் செழிக்க

எம் வாழ்த்துக்கள், மாணவச்செல்வங்களே! ...

 

கற்றவற்றை நிறைவாக்க கற்பவை தொடராக்க புதிய கல்வியாண்டில் காலடி பதிக்கின்றோம்,

தாய்மொழி மறந்தவன் தாயை மறந்தவனாகின்றான் – ஆதலால் வாழிடமொழியோடுதாய்மொழியும் சிறந்து தமிழின் சிறப்புக்களை வளர்ப்பதற்காய் நாம் வாழ்வதற்காய் தமிழ்க்கல்வி கற்றிடுவோம்

வாரீர் வாரீர் !

 

பாடசாலை ஆரம்பம்: 27.08.16 சனிக்கிழமை, நேரம்: 09.30.

எதிர்வரும்: 27.08.16 சனிக்கிழமை பாட நூல்கள் வழமைபோல் வகுப்புக்களில் விற்பனை செய்யப்படும். மாணவர்களுக்கு தேவையான பாட நூல்களின் விபரத்தையும் அதற்கு உரிய பணத்தையும் கடிதஉறையில் வைத்து மாணவர்களிடம் கொடுத்து அனுப்பி வைக்கவும். பாடநூல்கள் வகுப்பறைகளில் விநியோகிக்கப்படும்.

நிருவாகம்

அறிவித்தல்

 

இல்ல விளையாட்டுப்போட்டிகள் 2016

இல்ல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பயிற்சிகள் நடைபெறும் விபரம்:

இடம்:   Lambertseter idrettsbanen
காலம்:

  08.06.2016 - 17:00-19:00

  10.06.2016 - 18:00-19:30

 

தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான அரை இறுதிப்போட்டிகள் 11.06 சனிக்கிழமை 15:00 மணிக்கும், இறுதிப்போட்டிகள் 12.06 ஞயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கும் ஆரம்பமாகும்.

11.06 சனிக்கிழமை அன்று நடைபெறும் சுவட்டு தெரிவு, நீளம் பாய்தல் (இறுதி) போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்கள் விபரமும் இணைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலோனோர் விளையாட்டுப்போட்டிகளிற்கான பதிவுகளை செய்தும் அங்கத்தவர் கட்டணம் 85 குறோண்களை இன்றும் செலுத்தாது உள்ளீர்கள். எனவே கட்டணங்களை விரைவாக செலுத்தவும். செலுத்தாதவர்களின் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. வங்கி இல: 1602.56.23480, கட்டணத்தை வங்கியூடாகச் செலுத்தும் போது குடும்ப இலக்கம் அல்லது மாணவர் இலக்கத்தை குறிப்பிடவும்.

11.06.2016 அன்று கோடை கால ஒன்றுகூடலும் இக் கல்வியாண்டின் நிறைவு நாளுமாகும்.

தவணைக்கட்டணம் மற்றும் அங்கத்துவர் கட்டணங்களை இதுவரையில் கட்டாதவர்கள் விரைவாக செலுத்தவும். கட்டிட நிதி பற்றுச்சீட்டை பெற்றவர்கள் உங்களால் முடிந்த தொகையை மாதத் தவணையில் செலுத்தும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 நிருவாகம்

 

அறிவித்தல்

 

04.06.2016 சனிக்கிழமை அன்று அனைத்துலகத் எழுத்துத்தேர்வுகள் காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும். பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் 30 நிமிடங்களிற்கு முன் சமூகம் அளித்தல் வேண்டும்.

மழலைகள் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலகத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களிற்கு வகுப்புகள் நடைபெறமாட்டாது.

தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் -2016, 11.06 சனி, மற்றும் 12.06 ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும்.

விளையாட்டுப்போட்டிகளிற்கான பதிவுகளை செய்த மாணவர்களின் பெயர் விபரங்களை பிரத்தியேக விளம்பரப்பலகையில் பார்வையிடவும் அதில் பிழைகள் ஏதும் இருப்பின் நிருவாகத்தை அணுகவும்.

பெரும்பாலோனோர் விளையாட்டுப்போட்டிகளிற்கான பதிவுகளை செய்தும் அங்கத்தவர் கட்டணம் 85 குறோண்களை இன்றும் செலுத்தாது உள்ளீர்கள். எனவே கட்டணங்களை விரைவாக செலுத்தவும். செலுத்தாதவர்களின் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

11.06.2016 அன்று கோடை கால ஒன்றுகூடலும் இக் கல்வியாண்டின் நிறைவு நாளுமாகும்.

தவணைக்கட்டணம் மற்றும் அங்கத்துவர் கட்டணங்களை இதுவரையில் கட்டாதவர்கள் விரைவாக செலுத்தவும். கட்டிட நிதி பற்றுச்சீட்டை பெற்றவர்கள் உங்களால் முடிந்த தொகையை மாதத் தவணையில் செலுத்தும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 நிருவாகம்

அறிவித்தல்

 

தேர்வுகள்:

ஆண்டிறுதித் தேர்வு 28.05.2016 சனிக்கிழமை அன்று நடைபெறும். 6 - 10 வரையிலான வகுப்புகளிற்கு போதுத்தேர்வாக நடைபெறும்.

 

இல்லவிளையாட்டுப்போட்டிகள் 2016

தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் 11, 12.06.2016 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் அங்கத்தவர் கட்டணத்தை வங்கியினுடாக செலுத்தியிருத்தல் வேண்டும்.

இடம்: Lambertseter banen
காலம்: 11.06.2016, 12.06.2016
விண்ணப்ப முகவரி: இல்லவிளையாட்டுப்போட்டிகள்
அங்கத்தவர் கட்டணம்: 85 kr
முடிவுத் திகதி: 24.05.2016

 

நிருவாகம்

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo