ஆண்டிறுதித் தேர்வு 28.05.2016 சனிக்கிழமை அன்று நடைபெறும். 6 - 10 வரையிலான வகுப்புகளிற்கு போதுத்தேர்வாக நடைபெறும்.
இல்லவிளையாட்டுப்போட்டிகள் 2016
தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் 11, 12.06.2016 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் அங்கத்தவர் கட்டணத்தை வங்கியினுடாக செலுத்தியிருத்தல் வேண்டும்.
புலன்மொழித்தேர்வுகளை நடாத்தி முடிப்பதற்கு எம்முடன் இணைந்து ஒத்துளைப்பு வளங்கிய பெற்றோர்கள், பெற்றோர்குழுவினர் மற்றும் ஆசிரியர்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
ஏதிர்வரும்14.05.2016 சனிக்கிழமை அன்று காலை 9:30 மணிக்கு வழமையான வகுப்புக்கள் ஆரம்பமாகும்.
எதிர்வரும் 07.05.2016 சனிக்கிழமை வாய்மொழித்தேர்வு நடைபெற உள்ளதால் மழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலக தேர்வுக்கு விண்ணபிக்காதவர்களுக்கும் வழமையான வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.
கீழே தரப்பட்டுள்ள நேரஅட்டவணை அண்னளவாகவே போடப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை மற்றும் தேர்விற்கு பாவிற்கும் நேரங்களுக்கு ஏற்ப தேர்வு தொடங்கும், முடியும் நேரங்கள் அமையும்.
தேர்வுக்கான வகுப்பு ஒழுங்குகளும் தேர்வு ஆரம்பமாகும் நேர அட்டவணையும் :
வகுப்பு 1, 2, 9, 10
08:45 மணி
வகுப்பு 3, 4
09:45 மணி
வகுப்பு 7, 8
10:15 மணி
வகுப்பு 5, 6
13:00 மணி
பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும் மேற் தரப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாக சமூகம் தரவேண்டும்.
எதிர்வரும் 30.04.2016 சனிக்கிழமை 11:30 மணிக்கு பெற்றோர்கூட்டம் நடைபெறும்.
இல்லவிளையாட்டுப்போட்டிகள் 2016
தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் 12, 13.06.2016 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் அங்கத்தவர் கட்டணத்தை வளாக அலுவலகத்திலோ அன்றி வங்கியினுடாகவோ செலுத்தியிருத்தல் வேண்டும்.
பாடசாலை 23.04.2016 சனிக்கிழமை தியாகி அன்னை பூபதி அம்மாவை நினைவுகூறும் வண்ணம் அகவணக்க நிகழ்வுடன் ஆரம்பமாகும்.
இல்லவிளையாட்டுப்போட்டிகள் 2016
தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் 12.06.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறும். வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் அங்கத்தவர் கட்டணமாக 85 குறோண்களை வளாக அலுவலகத்திலோ அன்றி வங்கியினுடாகவோ செலுத்தியிருத்தல் வேண்டும். விண்ணப்ப முடிவுத்திகதி விரைவில் அறியத்தரப்படும்.
பாடசாலை 02.04 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகும்..
விண்ணப்ப முடிவுத்திகதி
அனைத்துலகத் தமிழ்த்தேர்வுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 02.04 சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை பெற்றோர்களே பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணம் 40 குரோணர்களையும் படிவத்தையும் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைக்கவும்.
பிரத்தியேக வருடாந்தப்பொதுக்கூட்டம் எதிர்வரும் பங்குனி மாதம் ( mars ) 12.03.2016 சனிக்கிழமை காலை 11:15 மணிக்கு Brynskole இல் நடைபெறும்.
பேச்சுப் போட்டிக்கான தெரிவுப் போட்டி
எதிர்வரும் 13.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு Brynskole இல் நடைபெறும். போட்டிக்கு அணியஞ்செய்த மாணவர்கள் காலை 11:00 மணிக்கு முன்னர், பாடசாலையில் தயாராக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆரம்பமாகும் நேரம் : 11:00 மணி
காலம் : 13.03.2016 (ஞாயிற்றுக்கிழமை)
இடம் : தொய்யன் வளாகம் ( Bryn Skole)
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்து. இறுதிப்போட்டி 19.03.16 சனிக்கிழமை மொட்டன்ஸ்றூட் வளாகத்தில் நடைபெறும்.( வழமையான வகுப்புகள் நடைபெறமாட்டாது) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் மாணவர்களின் விபரம் இணையத்தில் வெளியிடப்படும்.
ஓவியம், உறுப்பெழுத்து, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு வைபவம் எதிர்வரும் 05.03.2016 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு எமது பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் நடைபெறும்.
அனைத்துலகத் தமிழ்ததேர்வு 2016
தேர்வுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 02.04.2016. பெற்றோர்களே விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணம் 40 குரோணர்களையும் படிவத்தையும் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைக்கவும்.