Home

You are here

அறிவித்தல்

புலன்மொழி வளத்தேர்வு

04.05.19 சனிக்கிழமை வாய்மொழித்தேர்வு நடைபெற உள்ளதால் மழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலக தேர்வுக்கு விண்ணபிக்காதவர்களுக்கும் வழமையான வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.

கீழே தரப்பட்டுள்ள நேரஅட்டவணை அண்னளவாகவே போடப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை மற்றும் தேர்விற்கு பாவிற்கும் நேரங்களுக்கு ஏற்ப தேர்வு தொடங்கும், முடியும் நேரங்கள் அமையும்.

தேர்வுக்கான வகுப்பு ஒழுங்குகளும் தேர்வு ஆரம்பமாகும் நேர அட்டவணையும் :

ஆண்டு 1, 2, 3     -   08:45

ஆண்டு 4, 5, 6     -   10:15

ஆண்டு 7, 8         -   11:00

ஆண்டு 9, 10        -   12:00

பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும் மேற் தரப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாக சமூகம் தரவேண்டும்.

அனைத்துலகத்துலக எழுத்துத்தேர்வு 01.06.19 சனிக்கிழமை அன்று நடைபெறும்.

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2019

தொய்யன், மொட்டன்ஸ்றூட், ஒஸ்போல்ட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 02.06.19 ஞாயிற்றுக் கிழமை Lambertseter friidrettsbane விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் (முகவரி) அங்கத்தவர் கட்டணம் 100 குறோணர்களை வங்கியினுடாகவோ (1602 56 23480) அல்லது Vipps (22052) முறையிலோ செலுத்தியிருத்தல் வேண்டும். பதிவுகளுக்கான இறுதி திகதி 13.05.19.

இவ்வருடம் இன அழிப்பு நாளான 18.05.19 ஐ எமது வளாகத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் நிருவாகம் இணைந்த நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்களினதும் மற்றும் ஆசிரியர்களினதும் நிகழ்வுகள் நடைபெறும். நிகழ்வுகளிற்கான பயிற்சிகள் சனிக்கிழமைகளில் வகுப்புக்கள் முடிந்த பின் நடைபெறும். நிகழ்வுகளை வகுப்பாசிரியர்கள் ஒருங்கமைப்பார்கள்.

நிருவாகம்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo