Home

You are here

அறிவித்தல்

 

பெற்றோர் கூட்டம்

பெற்றோர் கூட்டம் 23.10 சனிக்கிழமை காலை 11:15 மணிக்கு Brynskole ல் நடைபெறும்.

ஓவியப்போட்டிகள்

எதிர்வரும் 23.10.21 சனிக்கிழமை அனைத்து வகுப்புகளுக்குமான ஓவியப்போட்டிகள் நடை பெறும்.

ஆண்டு 1 - 5 வரை தாம் விரும்பிய ஓவியங்களை வரையலாம்.

ஆண்டு 6 இற்கான தலைப்பு ஆசிரியரினால் முன்கூட்டியே வழங்கப்படும் மாணவர்கள் அதை வீட்டில் பயிற்சிசெய்தபின் அடுத்தவாரம் வகுப்பில் வரைய வேண்டும்.

ஆண்டு 7 - 10 ற்கு வகுப்பறையில் கொடுக்கப்படும் ஓவியத்தைப் பார்த்து வரைதல் வேண்டும்..

உறுப்பெழுத்து, கட்டுரைப் போட்டிகள்

எதிர்வரும் 06.11.21 சனிக்கிழமை உறுப்பெழுத்து மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடைபெறும்.

ஆண்டு 1 - 5 வரை உறுப்பெழுத்து, வகுப்பில் ஆசிரியரினால் கொடுக்கப்படும் சொல்லியங்களை பார்த்து எழுதுதல் வேண்டும்.

ஆண்டு 6 க்கு முதல்வாரம் ஆசிரியரினால் கொடுக்கப்படும் தலைப்பை வீட்டில் பயிற்சி செய்து வகுப்பில் எழுத வேண்டும்.

ஆண்டு 7 - 10 வரை மூன்று கட்டுரை தலைப்புக்கள் முதல் வாரமே கொடுக்கப்படும். போட்டி நடைபெறும் நாள் வகுப்பில் 3 கட்டுரைகளில் ஒரு தலைப்பு ஆசிரியரினால் கொடுக்கப்படும் அக்கட்டுரையை எழுதுதல் வேண்டும்.

நிருவாகம்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo