Home

You are here

தமிழ்த்தாய் வாழ்த்து - பாடசாலை கீதம்

தமிழ்த்தாய் வாழ்த்து  

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி                     வாழிய வாழியவே!
வானம் அளந்த அனைத்தும் அளந்திடும்                வண்மொழி வாழியவே.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி                     வாழிய வாழியவே!
வானம் அளந்த அனைத்தும் அளந்திடும்               வண்மொழி வாழியவே.
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி                     இசைகொண்டு வாழியவே
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி            என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க                          துலங்குக வையகமே
தொல்லை வினைதரு தொல்லை அகன்று           சுடர்க ஈழ தமிழ் நாடே.
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி              வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த அனைத்தும் அறிந்திடும்              வளர்மொழி வாழியவே.
வளர்மொழி வாழியவே!        வளர்மொழி வாழியவே!        வளர்மொழி வாழியவே!

 


அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் - நோர்வே - பாடசாலை கீதம்

வாழியபூபதி தமிழ்க்கலைக்கூடம்             வையகம் போற்றிட வளர்மதி எனவே
வாழியபூபதி தமிழ்க்கலைக்கூடம்             வையகம் போற்றிட வளர்மதி எனவே

வாழ்க வாழ்கவே            வாழ்க வாழ்கவே            வாழ்க வாழ்கவே

ஈழத்தின் வெளியே இலங்கிடும் கலையகம்         இளையவர் நாமும் ஏற்றிடும் அறிவகம்
ஈழத்தின் வெளியே இலங்கிடும் கலையகம்         இளையவர் நாமும் ஏற்றிடும் அறிவகம்
அன்பும் அறனும் பண்பும் பயில்வோம் - நாளும் நாம் தமிழரென மார்தட்டிச் சொல்வோம்

வாழியபூபதி தமிழ்க்கலைக்கூடம்             வையகம் போற்றிட வளர்மதி எனவே

வாழ்க வாழ்கவே            வாழ்க வாழ்கவே            வாழ்க வாழ்கவே

புல் நுனி மீது வெண்பனி போர்த்தும்            நடுநிசிச் சூரியன் நாணிச் சிவக்கும்
புல் நுனி மீது வெண்பனி போர்த்தும்            நடுநிசிச் சூரியன் நாணிச் சிவக்கும்
நேரிய நோர்வே நன்னிலந் தன்னில் - எம் முத்தமிழ்க் கலைக்கூடம் முகிழ்த்தது வாழி

வாழியபூபதி தமிழ்க்கலைக்கூடம்             வையகம் போற்றிட வளர்மதி எனவே

வாழ்க வாழ்கவே            வாழ்க வாழ்கவே            வாழ்க வாழ்கவே

பாலகர் வதனம் பரவசம் காட்டும்            பாருக்குள் எம்மினம் பார் என்றழைக்கும்
பாலகர் வதனம் பரவசம் காட்டும்            பாருக்குள் எம்மினம் பார் என்றழைக்கும்
தாய்மொழி தமிழ் மொழி தழைக்கும் - இங்கு தளிர் விட்ட கலைகள் சாதனை செய்யும்.

வாழியபூபதி தமிழ்க்கலைக்கூடம்             வையகம் போற்றிட வளர்மதி எனவே

வாழ்க வாழ்கவே!             வாழ்க வாழ்கவே!            வாழ்க வாழ்கவே!
 

 

 

 

 

பாடசாலை கீதம் MP3 டிவில் இங்கே தொகுக்கப்படுகின்றன. இதனை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் தொடுப்பை அழுத்தவும்.

tamil_thai_valthu

Annai - annai_tamilsk_kultur_song_track

Annai_annai_tamilsk_kultur_song

 

 

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo