Home

You are here

• வாரம் 23 -2019

பெற்றோருக்கான தகவல்கள்

விளையாட்டுப்போட்டி - 02.06.2019 - ஞாயிற்றுக்கிழமை

எமது மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 2019 வெகுசிறப்பாக நடந்தேறியதையிட்டு மனநிறைவடைகின்றோம்.

 

தமிழர் சிறார் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் (Tamilsk barn og ungdom idrettsklubb Norge) ஆதரவில், அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட லோறன்ஸ்கூக், வைத்வேத் வளாகங்களினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி திட்டமிட்டவாறு சிறப்பாக நடைபெற்றது.

 

நோர்வேயின் Lillestrømபகுதியில் அமைந்துள்ள Romerike friidrettsstadion மைதானத்தில் காலை 09.00 மணிக்கு ஆரம்பித்த இப்போட்டியானது மாலை 18.00 மணிக்கு முன்பதாக அனைத்து நிகழ்வுகளும் முடிவடைந்த நிலையில் நிறைவேறியது.  

 

இப்போட்டியை ஆரம்பம் முதல் இறுதி வரை நடாத்துவதற்கு பலரினதும் உழைப்பு இன்றியமையாததாக இருந்தது. இருவளாகங்களின் இணைவில் நடாத்தப்பட்ட இப்போட்டியின் சிறப்பில் சகல வழிகளிலும் எம்மோடு தோளோடுதோள் நின்று உழைத்த அனைத்து உறவுகளுக்கும் எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

 

நாம் ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுப்போட்டியை நடாத்தியமையால் எதிர்வரும் 08.06.2019, சனிக்கிழமை அன்று பாடசாலை விடுமுறைநாள் என அறியத்தருகிறோம்.

 

விளையாட்டுப்போட்டியின் மீளாய்வுக்கூட்டம் 15.06.2019, சனிக்கிழமை அன்று 09:45 – 11:00; மணி வரை மேல்மாடியில் நடைபெறும்.

 

கோடைகால ஒன்றுகூடலானது இந்தத் தவணையின் நிறைவு நாளான 15.06.2019, சனிக்கிழமை, 11:30 – 14:00 வரை இடம்பெறும்.

 

இவ்வொன்றுகூடலுடன் இவ்வாண்டுக்கான கோடைகால விடுமுறை விடப்படுகிறது. அனைவருக்கும் இனிய கோடைகால விடுமுறை வாழ்த்துகள் உரித்தாகுக.

 

அங்கத்துவர் கட்டணம், தவணைக் கட்டணம், தமிழர் மேம்பாட்டு நிதி 

 

 100 kr அங்கத்துவருக்கான கட்டணம். இதனை நேரடியாக தலைமை   நிர்வாகத்திற்குச் செலுத்துமாறு வேண்டுகின்றோம்;.

(6073 05 24199 med kid nr.)

 700 kr தவணைக் கட்டணம். இதனை வங்கியிலக்கம் 1503 25 88384 இற்கு செலுத்துமாறு வேண்டுகின்றோம். 

(Vipps 100740 - 12,25 kr வங்கிச்செலவு)

 200 kr தமிழர் மேம்பாட்டு நிதி. இதனை வங்கியிலக்கம் 1503 25 88384 இற்கு செலுத்துமாறு வேண்டுகின்றோம். 

(Vipps 100740 – 4,00 krவங்கிச்செலவு)

 

கட்டணங்கள் சம்பந்தமாக கேள்விகள் இருப்பின் வளாக நிதிப்பொறுப்பாளர் 

சுரேஷ் (46831513) அவர்களைத் தொடர்புகொள்ளவும்.

 

 கலை வகுப்புக்கள் 

புதிய கல்வியாண்டில் கலைப்பாடம் கற்க விரும்பும் மாணவர்கள் https://forms.gle/5Q5x7QSDLNQJUdD37 என்ற இணையத்தளம் மூலம் உங்கள் பதிவுகளை பெயர்;, வகுப்பு, கற்க விரும்பும் கலைப்பாடம் போன்ற விபரங்களுடன் எதிர்வரும் 15.06.2019, சனிக்கிழமைக்கு முன்பதாகப் பதிவுசெய்யவும்.

 

 பதிவுசெய்யும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வியாண்டு 2019/2020 இல் கலை வகுப்புகள் ஆரம்பிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.

நன்றி               

நிர்வாகம்

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo