Home

You are here

• வாரம் 35 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!
கிழமை இல. 35-2019

 24.08.19 அன்று பாடசாலை மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் புதிய பல சிறப்பான திட்டங்களுடன்இ புதிய கல்வியாண்டை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.   

கல்வி
ஆசிரியர்கள் பல புதிய சிந்தனைகளுடனும் புதிய
பாடப்புத்தகங்களுடனும் தமது கற்பித்தல் பணியை
தொடங்கியுள்ளார்கள்.

31.08.19 அன்றும் விலைப்பட்டியலுடன் மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் பாடசாலை மண்டபத்தில் வைக்கப்படும். தேவையானவர்கள் அதற்குரிய தொகையை பணமாகவோ அல்லது vipps மூலமாகவோ செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பு: வாராந்த மாணவர்களின் வருகை/வரவின்மை குறித்த தகவல்களை நேரடியாக அந்தந்த வகுப்பாசிரியரிடம் தெரிவிக்கவும். இதுகுறித்து Viber-குழுவில் தெரிவிப்பதை முற்றாகத் தவிர்க்கவும்.

ஆண்டு 2016 பிறந்த மாணவர்களுக்கான சிறுவர் வகுப்பு நவராத்திரிவிழாவுடன் ஆரம்பமாகவுள்ளது.

கலை
இப்புதிய கல்வியாண்டில் கலை கற்க விரும்பும் மாணவர்கள் நிர்வாகத்துடன் அல்லது lorenskog.annai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
கலைவகுப்புக்கள் இவ்வருடம் நவராத்திரிவிழாவுடன் ஆரம்பமாகவுள்ளது.

 

வகுப்புப்பிரதிநிதிகள் மற்றும்× பெற்றோர்குழுத்தெரிவு
31.08.2019 சனிக்கிழமை காலை 09:45 முதல் 11:45 வரை வகுப்புப்பிரதிநிதிகள் தெரிவும் 12:00 முதல் 12:30 வரை
வகுப்புப்பிரதிநிதிகள் சந்திப்பும் பெற்றோர்குழுத்தெரிவும் நடைபெறும். அனைத்துப் பெற்றோர்களும் வகுப்பறையில் நடைபெறவிருக்கும்
வகுப்புப்பிரதிநிதித் தெரிவுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுதல் அவசியம்.

குறிப்பு: குறித்த திகதிக்கு முன் முழுமையாக வளாகத்தினால்
அறவிடப்பட்ட கட்டணங்களைச் செலுத்தியவர்கள் மட்டுமே
வளாகத்தைப் பிரதிநிதிப்படுத்தும் எந்தவொரு பொறுப்புக்களிலும்
வகிக்கலாம். உதாரணம்: நிர்வாகவுறுப்பினர், வகுப்புப்பிரதிநிதி/பெற்றோர்குழு,   
தேனீர்ச்சாலைக்நிதிகுழு போன்றவை. 

வளாகத்திற்குச் செலுத்தவேண்டிய கட்டணத்தை இதுவரை செலுத்தாதவர்களுக்கும் வகுப்புப்பிரதிநிதியாகப் பொறுப்பேற்று இப்பாடசாலையில் நற்பணி செய்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம் அதாவது வளாகத்திற்குச் செலுத்த வேண்டிய
முழுமையான கட்டணத்தொகையை 14.09.2019இற்குள்
செலுத்துவதாக உறுதியளித்துப் பொறுப்பேற்றல்.
பொறுப்பேற்றவரிடமிருந்து 14.09.19 இற்குள் வளாகத்தின்
வங்கிக்கணக்கிற்கு கட்டணம் வராதபட்சத்தில், எந்தவொரு
அறிவித்தலுமின்றி அடுத்துவரும்; பாடசாலை நாளன்று வேறொருவர் அப்பொறுப்பிற்கு தெரிவுசெய்யப்படுவார். 

 

கட்டணம்
எமது வளாகத்தினால் அறவிடப்பட்ட கட்டணங்கள் சிலவற்றை இதுவரை  செலுத்தாதவர்களுடன் தொலைபேசியினூடாக
நாம் தொடர்புகொள்வோம்.

விளையாட்டு/பொழுதுபோக்கு
ஒரு நற்செய்தி: தங்கள் பிள்ளைச்செல்வங்களின் தமிழ்த்தாய்மொழிக் கல்வியின் வளர்ச்சிக்காய் பாடசாலையில் கிட்டத்தட்ட 3 மணிநேரம் காத்திருக்கும் பெற்றோர்களின் பொழுதுபோக்குக்காக உள்ளரங்கவிளையாட்டுக்களான கரம்போர்ட், சீட்டுக்கட்டு, மற்றும் சதுரங்கம்  போன்றவை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
தங்களிடம் கரம்போர்ட், சீட்டுக்கட்டு, மற்றும் சதுரங்கம்
இருந்தால் எதிர்வரும் சனிக்கிழமை எடுத்துவரவும்.

குறிப்பு:
நாம் எமது பாடசாலையில் நூலகம் ஒன்றை உருவாக்கும்
முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் தாங்கள் பயனடைந்த புதிய/பழைய
சிறந்த பயனுள்ள புத்தகங்கள்ஃநூல்கள் இருந்தால் எமக்கு தந்துதவும்படி
கேட்டுக்கொள்கின்றோம். 

பெற்றோர்கூட்டம் 07.09.19 காலை 09:45 இலிருந்து மேல் மாடியில் நடைபெறும்.

 
 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo