Home

You are here

• வாரம் 36 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்! கிழமை இல. 36-2019

பெற்றோர்கூட்டம்
எதிர்வரும் சனிக்கிழமை 07.09.2019 09:45 இலிருந்து மேல்மாடியில் நடைபெறும். பல முக்கிய தகவல்களுடன் இக்கூட்டம் நடைபெறவிருப்பதால் பெற்றோர்கள் அனைவரும் இதில் பங்கேற்பது மிக அவசியம்.

 

31.08.19 அன்று சிறப்பாக வகுப்புப்பிரதிநிதிகளும் பெற்றோர்குழுவும் தெரிவுசெய்யப்பட்டது. மாணவர்களின் கல்வி, கலை, விளையாட்டு மற்றும் பாதுகாப்பு ஆகினவற்றிற்கு நாம் முக்கியத்துவமளிப்பது போல் இவர்களும் உறுதுணையளிப்பார்கள் என நம்புகின்றோம். 
இக்கல்வியாண்டில் பெற்றோர்குழுவில் ஏனைய பெற்றோர்களால் நியமிக்கப்பட்டவர்கள்
தலைவர்: திரு. ஜோ கிறேஷியன் றிச்சாட்
செயலாளர்: திரு. துராதரன் கணேஷமூர்த்தி (சுரேஷ்)
பொருளாளர்: திருமதி. சங்கீதா சத்தியரூபன்.

கல்வி
ஆண்டு 2016 பிறந்த மாணவர்களுக்கான சிறுவர் வகுப்பு நவராத்திரிவிழாவுடன் ஆரம்பமாகும்.

கலை
இப்புதிய கல்வியாண்டில் கலை கற்க விரும்பும் மாணவர்கள் நிர்வாகத்துடன் அல்லது lorenskog.annai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
கலைவகுப்புக்கள் இவ்வருடம் நவராத்திரிவிழாவுடன் ஆரம்பமாகவுள்ளது.

விளையாட்டுஃபொழுதுபோக்கு
அடுத்தவார பெற்றோருக்கான வாராந்தத் தகவலில்
 பெற்றோர்களுக்கான பல பொழுதுபோக்கு விபரங்கள் குறிப்பிடப்படும்.
 

 

குறிப்பு: நாம் எமது பாடசாலையில் நூலகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் தாங்கள் பயனடைந்த புதிய/பழைய சிறந்த பயனுள்ள
புத்தகங்கள்/நூல்கள் இருந்தால் எமக்கு தந்துதவும்படி கேட்டுக்கொள்கின்றோம். 
வகுப்புப்பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்குழு
பெற்றோர்களுடன் சேர்ந்து தமது நற்சேவையை செய்வதற்குத் தேவையான தொடர்பினை ஏற்படுத்த வைபர் குழுமம் ஒன்றைத் தனியாக
ஆரம்பிற்கவுள்ளார்கள். தயவுசெய்து அக்குழுமத்தை எமது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிர்வாகத்தினர்கள் மற்றும்
வளாகத்தைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் நன்மை தரும் விடயங்களை மட்டும் பரிமாறிக்கொள்ளவும்;
புரிந்துணர்விற்கு நன்றிகள்.  
 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo