Home

You are here

• வாரம் 37 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!
கிழமை இல. 37-2019

07.09.2019 அன்று பெற்றோர்கூட்டம் நடைபெற்றது
இவ்வளவு காலம் தேனீர்சாலை நடாத்த உதவி செய்துவந்த சில பெற்றோர் எமது வளாக யாப்பின் விதிக்கமைய தமிழர் வள மேம்பாட்டு  நிதியை செலுத்த மறுப்பதுடன், தொடர்ந்து தேனீர்சாலையை நடாத்த மறுப்பு தெரிவிப்பதால் மறு அறிவித்தல் வரும்வரை தேனீர்ச்சாலை நடைபெற மாட்டாது.
எமது வளாக மாணவ செல்வங்களின் நலன்கருதி யாரவது பெற்றோர் முன்வந்து தேனீர்சாலை நடாத்துவதை நாம் மனதார வரவேற்கின்றோம்.
ஆகவே பெற்றோர்களாகிய தாங்கள் மிக விரைவில் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறோம்.

Foreldreforum for LAPTK og 5000-On focus  என்று இரண்டு viber தளங்களிலிருந்து  சில பெற்றோர் எமது வளாக விடயங்களை பல பெற்றோருக்கு நிர்வாகத்தின் அனுமதியின்றி அனுப்பி வருகிறார்கள்.
இப்படியான செயல்பாடனது சீராக இயங்கும் பாடசாலையை சீர்குலைப்பதாகத்தான் நாம் கருதுகிறோம்.
இவர்களின் இப்படியான செயற்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கதுமாகும்.
இவர்களின் செயற்பாட்டிற்கு ஏனைய பெற்றோர் துணை போக வேண்டாமென அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

அறிவியல் அரங்கம்            

14.09.2019 – உளவியல்
09.45-10.45 பெற்றோருக்கு

11.15-12.30 மாணவருக்கு
நடாத்துபவர்கள்: ராணி ஜேசுராஜா (overlege),
     ரக்சனா சிறீஸ்கந்தராஜா(MA I psykologi)

 28.09.2019 பெற்றோருக்கான நீரழிவு நோய் பற்றிய அறிவியல் அரங்கம்            
         நேரம்: 09.45-12.30
நடாத்துபவர்: ராகினி மேகநாதன் (medisinstudent I6.året)

 16.11.19 கல்விக்குழு பெற்றோருடன் சந்திப்பு: கல்வி தொடர்பாக பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நடைபெறும். திகதி 22.09.19 ற்குள் மின்னஞ்சல் மூலம் விரும்பும் விடயங்களை அறிவிக்கலாம். lorenskog.annai@gmail.com

 மழலையர் முதல் 3 ஆம் வகுப்பு வரையுள்ள வகுப்பறைக்குள், பாடசாலைநாளின் கடைசி ஐந்து நிமிடங்கள்(மணி12.25) பெற்றோர்கள் சென்று வீட்டுப்பாடம் பற்றிய விபரங்களை அறியலாம்.

 கடந்த வாரம் இடைவேளை காவலாளிகளாக நின்றுதவிய 4 அ  வகுப்பைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவிப்பதுடன் அடுத்த வாரம் 5 ஆம் வகுப்பு பெற்றோர்களை இடைவேளைநேரத்தில் கண்காணிக்க உதவிபுரியும்படி வேண்டுகிறோம்.

 கலைவிழா 12.10.2019
     பொறுப்பு - 9, 10ஆம் வகுப்புகள்
அறிவிப்பாளர்கள் - 10ஆம் வகுப்பு, பாடசாலை கீதம் - 4ஆம் வகுப்பு, ஒப்படை – 9ஆம் வகுப்பு
 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo