Home

You are here

• வாரம் 38 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!    கிழமை இல. 38-2019

பொது நிகழ்வுகள்:

• 14.09.2019 அன்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவியல் அரங்கம் ராணி ஜேசுராஜா (Overlege) மற்றும் றக்சனா சிறீஸ்கந்தராஜா (MA i Phykologi) ஆகியோரால் மிகச்சிறப்பானமுறையில் நடாத்தப்பட்டது. வருகைதந்து தங்கள் நற்கருத்துக்களைத் தந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றிகள்.

• 28.09.2019 09.45-12.30 பெற்றோருக்கான நீரிழிவு நோய் பற்றிய அறிவியல் அரங்கம். நடாத்துபவர்: ராகினி மேகநாதன் (medisinskestudent I 6.året)

• 16.11.19 கல்விக்குழு பெற்றோருடன் சந்திப்பு: கல்வி தொடர்பாக பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நடைபெறும். 22.09.19 ற்குள் மின்னஞ்சல் மூலம் தேவைகளை அறிவிக்கவும். lorenskog.annai@gmail.com

கல்வி:

• 21.09.2019 இலிருந்து வகுப்பறைச்சந்திப்புக்கள் நடைபெறும். எந்தெந்த வகுப்புக்களுக்கு எவ்வெப்போது என்ற விபரங்கள் 

அந்தந்த வகுப்புக்களின் வைபர் குழுமங்களில் அறிவிக்கப்படும்.

 

• மழலையர் முதல் 3ஆம் வகுப்பு வரையான வகுப்பறைக்குள் வகுப்புமுடிவடையும் நேரத்திலிருந்து கடைசி 5 நிமிடங்கள்(11:55ஃ12.25) சென்று அந்தந்த வகுப்பாசிரியரிடம் வீட்டுப்பாடம் பற்றிய விபரம் அறியலாம்.

 

• இதுவரை யாராவது பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் வகுப்புக்களுக்கான வைபர்குழுமத்தில் பதிவுசெய்யப்படாமலிருந்தால் தயவுசெய்து அந்ததந்த வகுப்பாசிரியர்கள் மூலம் எமக்கு அறியத்தரவும்.

 

கலை:

• கலைவிழா 12.10.2019

பொறுப்பு - 9, 10ஆம் வகுப்புகள்

அறிவிப்பாளர்கள் - 10ஆம் வகுப்பு

பாடசாலைக் கீதம் - 4ஆம் வகுப்பு

ஒப்படை – 9ஆம் வகுப்பு

• 12.10.2019 நவராத்திரி விழா நவராத்திரி முடிந்துவரும் முதல் சனிக்கிழமை(12.10) நன்நாளும் அமைந்திருப்பதால் அன்று ஏடுதொடக்கலாம். யாராவது தங்கள் குழந்தைகளுக்கு ஏடுதொடக்க விரும்பினால் எதிர்வரும் 28.09.2019 இற்கு முன்னதாக lorenskog.annai@gmail.com மூலம் அல்லது கலைப்பொறுப்பாளருடன் தொடர்புகொள்ளவும்.

• கலைவகுப்புக்கள் இவ்வருடம் நவராத்திரிவிழாவுடன் ஆரம்பமாகவுள்ளது. முன்பதிவு மிக அவசியம். கலைப்பொறுப்பாளர் தொலைபேசி: 48198975

 

விளையாட்டுஃபொழுதுபோக்கு:

• பெற்றோர்களின் பொழுதுபோக்குக்காக கீழ்மாடியில் உள்ளரங்கவிளையாட்டுக்களான கரம்போர்ட், சீட்டுக்கட்டு, மற்றும் சதுரங்கம் போன்றவை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. 

 

• நாம் எமது பாடசாலையில் நூலகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் தாங்கள் பயனடைந்த புதியஃபழைய சிறந்த பயனுள்ள புத்தகங்கள்ஃநூல்கள் இருந்தால் எமக்கு தந்துதவும்படி         கேட்டுக்கொள்கின்றோம்.

 

வகுப்புப்பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்குழு:

• 21.09.2019 அன்று நிர்வாகம்-பெற்றோர்குழு/வகுப்பறைப் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறும்.

 

• கடந்த வாரம் இடைவேளை காவலாளிகளாக நின்றுதவிய 5ஆம்

வகுப்பைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவிப்பதுடன் அடுத்த வாரம் 6ஆம் வகுப்பு பெற்றோர்களை இடைவேளைநேரத்தில்

கண்காணிக்க உதவிபுரியும்படி வேண்டுகிறோம்.  

 

தேநீர்ச்சாலை:

• எமது வளாக மாணவச் செல்வங்களின் நலன்கருதி யாராவது பெற்றோர் முன்வந்து தேநீர்சாலையை நடாத்த விரும்பினால் உடனடியாக எம்மோடு தொடர்புகொள்ளவும். அதுவரை, மறுஅறிவித்தல் வரும்வரை தேநீர்ச்சாலை நடைபெறமாட்டாது.

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo