Home

You are here

• வாரம் 39 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 39-2019

பொது நிகழ்வுகள்:

• கலைமகள் விழா (நவராத்திரி) 12.10.2019 காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்

இடம்; சென் பாடசாலை

பொறுப்பு - 9, 10ஆம் வகுப்புகள்

அறிவிப்பாளர்கள் - 10ஆம் வகுப்பு, பாடசாலைக் கீதம் - 4ஆம் வகுப்பு

ஒப்படை – 9ஆம் வகுப்பு

• 12.10.2019 அன்று கலைமகள் விழா முடிந்துவரும் முதல் சனிக்கிழமை நன்நாளும் அமைந்திருப்பதால் அன்று ஏடுதொடக்கலாம். யாராவது தங்கள் குழந்தைகளுக்கு ஏடுதொடக்க விரும்பினால் எதிர்வரும் 28.09.2019 இற்கு முன்னதாக lorenskog.annai@gmail.com மூலம் அல்லது கலைப்பொறுப்பாளருடன் தொடர்புகொள்ளவும்.

• கலைவகுப்புக்கள் இவ்வருடம் கலைமகள் ஆரம்பமாகவுள்ளது. முன்பதிவு மிக அவசியம். கலைப்பொறுப்பாளர் தொலைபேசி: 48198975

 

• 28.09.2019 09.45-12.30 பெற்றோருக்கான நீரிழிவு நோய் பற்றிய அறிவியல் அரங்கம். நடாத்துபவர்: ராகினி மேகநாதன் (medisinskestudent I 6.året)

• 16.11.19 பெற்றோருடன் சந்திப்பு: கல்வி தொடர்பாக பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நடைபெறும். 

 

கல்வி:

• 21.09.2019 லிருந்து வகுப்பறைச்சந்திப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்தும் எந்தெந்த வகுப்புக்களுக்கு எவ்வெப்போது நடைபெறும் என்றவிபரத்தினை அந்தந்த வகுப்புக்களின் வைபர் குழுமங்களில்      அறிவிக்கப்படும்.

 

• மழலையர் முதல் 3ஆம் வகுப்பு வரையான வகுப்பறைக்குள் வகுப்புமுடிவடையும் நேரத்திலிருந்து கடைசி 5 நிமிடங்கள்(11:55ஃ12.25) சென்று அந்தந்த வகுப்பாசிரியரிடம் வீட்டுப்பாடம் பற்றிய விபரம் அறியலாம்.

• இதுவரை யாராவது பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் வகுப்புக்களுக்கான வைபர்க்குழுமத்தில் பதிவுசெய்யப்படாமலிருந்தால் தயவுசெய்து அந்ததந்த வகுப்பாசிரியர்கள் மூலம் எமக்கு அறியத்தரவும்.

 

பெற்றோர், வகுப்புப்பிரதிநிதிகள் மற்றும்× பெற்றோர்குழு:

• கடந்த வாரம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் 6ம் வகுப்புப் பெற்றோர்களுக்குப் பதிலாக இடைவேளை காவலாளிகளாக நின்றுதவிய 3ஆம் வகுப்பைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவிப்பதுடன் அடுத்த வாரம் 7ஆம் வகுப்பு பெற்றோர்களை இடைவேளைநேரத்தில்

கண்காணிக்க உதவிபுரியும்படி வேண்டுகிறோம்.  

 

• 21.09.2019 அன்று வகுப்புப்பிரதிகள் நிர்வாகஉறுப்பினருடனான நடைபெற்ற கூட்டத்தில், வகுப்புப்பிரதிநிதிகளின் வேண்டுகோளின்படி மீண்டும் புதிதாக பெற்றோர்குழுப்பொறுப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். 

தலைவர்: திரு. துராதரன் கணேஷமூர்த்தி (சுரேஷ்)

         உபதலைவர்: திருமதி. கிருபா சதீஸ் 

         பொருளாளர்: திருமதி. சங்கீதா சத்தியரூபன்.

கலைமகள் விழா முடிந்து அடுத்த வாரங்களில் இவர்கள் தமது பொறுப்புக்களை ஏற்பதாக முடிவு.

 

நன்றி!               

நிர்வாகம்

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo