Home

You are here

• வாரம் 40 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!
கிழமை இல. 40-2019
பொது நிகழ்வுகள்:

 அனைவருக்கும் இனிய இலையுதிர்காலம்
இரண்டாம் உலகப்போரில் நோர்வே சுவீடன் நாடுகளில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை காரணமாக உருளைகிழங்கு இந்நாடுகளில் நன்றாக பயிரிடப்பட்டது. வைகாசியில் பயிரிட்டு ஜப்பசியில் கிழங்கை கிண்டுவார்கள்இ கிண்டிய கிழங்கை பொறுக்கி சேகரிப்பற்காக பிள்ளைகளின் உதவி பெற்றோருக்கு தேவைப்பட்டது இதன் காரணமாக கிழமை 40 பாடசாலை விடுமுறை இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.
இந்த நடைமுறை எங்களது மாணவசெல்வங்களுக்கும் குதுகலமான விடுமுறையாக அமைய வாழ்த்துகின்றோம்.

• கலைமகள் விழா 12.10.2019 காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்
இடம் சென் பாடசாலை
பொறுப்பு - 9, 10ஆம் வகுப்புகள்
அறிவிப்பாளர்கள் - 10ஆம் வகுப்பு, பாடசாலைக் கீதம் - 4ஆம் வகுப்பு
ஒப்படை – 9ஆம் வகுப்பு
• 12.10.2019 அன்று நவராத்திரி முடிந்துவரும் முதல் சனிக்கிழமை நன்நாளும் அமைந்திருப்பதால் அன்று ஏடுதொடக்கலாம். யாராவது தங்கள் குழந்தைகளுக்கு ஏடுதொடக்கவிரும்பினால்
lorenskog.annai@gmail.com முலம் அல்லது கலைப்பொறுப்பாளருடன் தொடர்புகொள்ளவும்.

 

• கலைவகுப்புக்கள் இவ்வருடம் நவராத்திரிவிழாவுடன் ஆரம்பமாகவுள்ளது. முன்பதிவு மிக அவசியம். கலைப்பொறுப்பாளர் தொலைபேசி: 48198975
 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo