Home

You are here

• வாரம் 04 -2020

பெற்றோருக்கான தகவல்கள்!

 

தமிழர் திருநாளுக்கு வருகைதந்த மாணவமணிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
தமிழர் விழாவை மெருகூட்டும் வகையில் எங்களது மாணவசெல்வங்கள் பங்கேற்று சிறப்பித்தது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.

அங்கத்துவநீக்கம் செய்யப்பட்ட பெற்றோர் எமது பாடசாலையின் பெயரில் Foreldre forum for LAPTK - viber gruppe  ஐ பாவித்து எமது சீரான  செயட்பாடுகளை சீரழிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் பக்கசார்பான செய்திகளையும் அனுப்புவது சட்டத்தை மீறும் செயலாகும். இப்படியான தவறான நடவடிக்கைகளுக்கு பெற்றோர்கள் துணை போக வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வார இடைவேளைக்காவலாளிகளாக நின்றுதவ வேண்டியவர்கள் 1ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் ஆவர். எனவே உதவ விரும்பும் பெற்றோர் உங்கள் வகுப்புப் பிரதிநிதிகளிடம் பெயர்களை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

25.01.2020 மழலையர் வகுப்பு– 3;ஆம்வகுப்பு வரையான  
பெற்றோர்களுக்கு பட்டறை
 ஆசிரியர்: கௌரி ஆறுமுகதாஸ்   
 நேரம்: 10.00- 12.00
தமிழ்மொழியை தனது தாய்மொழியை கற்க தொடங்கும்  மாணவர்களுக்கு பெற்றோர்களாகிய நாம் எவ்வாறு இலகுவாகவும் இரசனையாகவும் வீட்டில் உதவலாம் என மழலையர் வகுப்பு– 3;ஆம்வகுப்பு பெற்றோர்களுக்குரிய பட்டறை.

08.02.2020 வருடாந்தப்பொதுக்கூட்டம்.

இக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள், கருத்துக்களை மின்னஞ்சல் மூலமாக lorenskog.annai@gmail.com 31.01.2020 திகதிக்கு முன் அனுப்பிவைக்கவும்.

அன்னை தமிழ் முற்றப்போட்டிகள் எதிர்வரும் 29.02.2020 அன்று ஆரம்பிக்கவுள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. கதைசொல்லும் போட்டியில் இருந்து படம் பார்த்து கதை சொல்லும் போட்டி வரை அனைத்துவிதமான போட்டிகளும் நடைபெற உள்ளன.
ஓவியப்போட்டி: - ஆரம்பவகுப்பு - வளர்நிலை 02 வரை வழங்கப்படும் தாளில்
உள்ள படத்திற்கு வர்ணம் வரைதல். 
வளர்நிலை 03, வளர்நிலை 04 அவர்களிற்கு பிடித்த ஓவியம் வரைதல்.
ஏனைய போட்டிகள் பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
அன்னை தழிழ்முற்றப்போட்டிக்கள் 2020 திருக்குறள் மனனம் (5-10 ஆம் வகுப்பு வரை) மற்றும் பேச்சுப்போட்டிகள் (1-5 ஆம் வகுப்பு வரை) தகவல்களுக்கு வகுப்புக்களுக்குரிய வைபர்குழுமத்தைப் பார்க்கவும். மாணவர்களை பங்குபற்றுமாறு ஊக்குவித்து அதற்குரிய உதவிகளை செய்யவும்.

 
 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo