Home

திருக்குறள் ஒப்புவித்தல்,சிறுகதை சொல்லுதல்,பேச்சு நிகழ்வுகள்

திருக்குறள் ஒப்புவித்தல்

எதிர்வரும் மார்ச் மாதம் 6ம் 7ம் திகதி சனி ஞாயிறு தினங்களில் ஆண்டு 4 முதல் ஆண்டு 10 வரை உள்ள மாணவர்கள் பங்குபெறவுள்ள திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்விற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.

https://forms.gle/nKFwsTy9hFM6VEWT8

விண்ணப்பமுடிவு திகதி 27.02.2021

சிறுகதை சொல்லுதல்,பேச்சு நிகழ்வுகள்

எதிர்வரும் மார்ச் மாதம் 13ம் 14ம் திகதி சனி ஞாயிறு மற்றும் 20ம்-21ம் திகதி சனி ஞாயிறு தினங்களில் பாலர் வகுப்பு முதல் ஆண்டு 7 வரை உள்ள மாணவர்கள் பங்குபெறவுள்ள சிறுகதை சொல்லுதல், பேச்சு நிகழ்வுகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.

https://forms.gle/HXdR7c6fofHdwz4E9

விண்ணப்பமுடிவு திகதி: 06.03.2021

 

 

அன்னைமுற்ற கல்வியியல் நிகழ்வுகள்

4ம் வகுப்பு தொடக்கம் 10ம் வகுப்பு வரையான திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்வுகள், 06.03.2021, 07.03.2021 சனி, ஞாயிறு நாட்களில் இடம்பெறும், இதற்குரிய விண்ணப்ப முடிவுத்திகதி 27.02.2021.

13.03.2021 பாலர் வகுப்புக்குரிய கதைசொல்லுதல் நிகழ்வு இடம்பெறும்.

14.03.2021- 1ம் வகுப்பு தொடக்கம் 3ம் வகுப்பு வரை பேச்சு நிகழ்வு இடம்பெறும். 

கல்வியற் போட்டி முடிவுகள் 2020-2021

நடைபெற்று முடிந்த கல்வியற் போட்டி முடிவுகளை இணைப்பில் பார்வையிடவும்.

தைத்திருநாள் வாழ்த்துரை 2021

https://youtu.be/3EZ6dIyfqtg

நோர்வேப் பிரதமர் மதிப்பிற்குரிய ஆர்னா சூல்பேர்க் அவர்கள்

வழங்கிய தைத்திருநாள் வாழ்த்துரை 2021

பேரன்புக்குரியவர்களே !

 இணையத்தோடு உறவாடும் இந்த வருடத்தில், கதிரவனுக்கும் உழவனுக்கும் நன்றி கூறும் பாரம்பரியத்தைக் கொண்ட உங்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 நோர்வேயில் வாழும் தமிழர்கள் உட்பட இலங்கை, இந்தியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்த நாட்களில் தைப் பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். இது தமிழர்களால் மிகப் பெரிய அடையாளமாகப் கருதப்படும் முக்கிய நாளாகும்.

அறிவித்தல்

இன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு எமது வளாகத்தின் கற்பித்தல் செயற்பாடுகள்,  எதிர்வரும் 09.01.2021 ல் இருந்து மறு அறிவித்தல் வரும் வரை  இணையமுற்றத்தில் (Teams) நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

 

நிகழ்வுகளுக்கான விண்ணப் படிவங்கள்.

இணையத்தில் தை 9 ம் திகதியும் அதன் பின்னரும் இடம் பெறும் நிகழ்வுகளுக்கான விண்ணப் படிவங்கள்.

ஆண்டு 1 முதல் ஆண்டு 4 வரையான மாணவர்களின் விண்ணப்ப படிவங்களை பெற்றோர் விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்பாக பூர்த்தி செய்து அனுப்பி வைத்தல் வேண்டும்.

ஆண்டு 5 முதல் ஆஇண்டு 10 வரையான மாணவர்களின் விண்ணப்ப படிவம் வளாகங்களால் மட்டுமே பூர்த்தி செய்து அனுப்பி வைத்தல் வேண்டும்.

திருக்குறள் ஒப்பித்தல்

திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளின் போது அனைத்து வகுப்பு மாணவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட குறள்களை ஒப்பிக்க வேண்டும்.

ஆண்டு 4,ஆண்டு 5 மாணவர்கள் பொருள் விளக்கம் கூறவேண்டியதில்லை.

ஆண்டு 6 முதல் ஆண்டு 10 வரையான மாணவர்கள் ஒப்பிக்கும் குறள்களோடு தாம் விரும்பும் ஏதாவது இரண்டு குறள்களுக்கு பொருள் விளக்கத்தையும் ஒப்பித்தல் அவசியம்.

குறள்களை தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்.

தேசிய மட்டத்திலான அன்னைத் தமிழ்முற்றப் போட்டி 2021

புலம்பெயர் மாணவர்களின் மொழித்திறனைக் கருத்திற்கொண்டு, பல நிகழ்வுகளை அன்னைத் தமிழ் முற்றப் பணிக்குழுவினர் இணையமுற்றத்தில் நடாத்தவுள்ளனர். நிகழ்வாக மழலையர் மற்றும் பாலர் பாடல்கள், 

1ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆத்திசூடி, 

2ம் ஆண்டு மாணவர்களுக்கு கொன்றைவேந்தன், 

3ம் மற்றும் 4ம் ஆண்டு மாணவர்களுக்கு நல்வழி 

என்பன நடைபெறும். மழலையர், பாலர், ஆண்டு 1,2 மாணவர்களுக்கு 09.01.2021 தேதியிலும், ஆண்டு 3,4 மாணவர்களுக்கு 10.01.2021 தேதியிலும் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியம் வரைதல் 2020

எதிர்வரும் 21.11.20 அன்று வழமையான இணையமுற்றக் கற்பித்தலுடன், மாவீரர் நினைவாக நடாத்தப்படும் மாணவர்களின் ஓவியம் வரைதலும் இடம்பெறும்.

தலைப்புக்கள்.

பிரிவு 1 (வகுப்பு 5,6)

1) தமிழீழ தேசியசின்னங்களில் ஒன்று  

  அல்லது  

2) நடுகல் வழிபாடு

பிரிவு 2 (வகுப்பு 7,8 ) 

முக்கிய அறிவித்தல் 05.11.2020

இன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு எமது கற்பித்தல் செயற்பாடுகள்  இவ்வாரம் முதல், (07.11.2020)  இணையமுற்றத்தில்(Teams) நடைபெறும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பபைக் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களாக நோர்வேயில் பரவிவரும் கொரோனா கிருமியின் தாக்கம், எங்களின் நாளாந்த வாழ்கையை மேலும் மோசமாகப்பாதிக்க ஆரம்பித்துள்ளது. நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுக்கும் நோக்குடனே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் தேவையற்ற ஒன்று கூடல்கள், விருந்துபசாரங்களை தவிர்த்து பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துமாறு பெற்றோர்களை உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

அங்கத்தவர், பாதுகாவலர் தகவல்களைப் புதுப்பித்தலுக்கான படிவம்.

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் நோர்வே இவ் விண்ணப்பபத்தை நிரப்பி அனுப்புவதன் மூலம் தங்களுக்கான இணையமுற்ற கடவுச்சொல் பயனாளர் பெயர் என்பன தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆகவே காலத்தை கருத்தில் கொண்டு தாமதிக்காது இவ் விணப்பத்தை நிரப்பி அனுப்பவும்.

அன்னையின் மாணவர்களுக்கான தனிப்பட்ட மின்னஞ்சல் ஒன்று அன்னையால் உருவாக்கப்படவுள்ளது. இது fornavn@elev.annai.no என்று அமையும். இந்த அடையாளமின்னஞ்சலே இனிவரும் காலங்களில் தங்கள் பிள்ளைகளின் அன்னையின் இணையவழிக்கல்வியின் (Teams) உள்ளே நுழைவதற்கானதாக அமையும். தங்கள் விண்ணப்பப்படிவம் கிடைக்கப் பெற்றதும் இவற்றைச் தயாரித்து தங்களுக்கு அனுப்பவுள்ளோம்

பதிவிற்க்கு: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfZyuK87Yhy1JOIWdhjWtvT8iaKMi0au-naXCM5S4AYrbe8Mg/viewform

 

 

Pages

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo