Home

You are here

இணையமுற்றத்தில் தமிழ்க் கல்வி

இன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு தமிழ் வகுப்புக்கள் வளாகத்தில் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் வகுப்புக்களை இணையமுற்றத்தில் (TEAMS ) இவ்வாரம் முதல் (06.11.2020 வெள்ளி, சனி, ஞாயிறு ) நடாத்துவது என திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப்  பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்படுகிறது.
 

கடந்த சில வாரங்களாக நோர்வேயில் பரவி வரும் கொரோனா கிருமியின் தாக்கம், எங்களின் நாளாந்த வாழ்கையை மேலும் மோசமாகப் பாதிக்க ஆரம்பித்துள்ளது. நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுக்கும் நோக்குடனே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

அங்கத்தவர், பாதுகாவலர் தகவல்களைப் புதுப்பித்தலுக்கான படிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவ் விண்ணப்பபத்தை  நிரப்பி அனுப்புவதன் மூலம் தங்களுக்கான இணையமுற்ற பயனாளர் பெயர்  மற்றும் கடவுச்சொல்  தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆகவே காலத்தை கருத்தில் கொண்டு தாமதிக்காது இவ் விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டுகிறோம்.  ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்தனியாக விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.

 

இந்த பயனாளர் பெயர்  மற்றும் கடவுச்சொல் இனி வரும் காலங்களில் தங்கள் பிள்ளைகள் அன்னையின் இணையவழிக்கல்வியின் (TEAMS ) உள்ளே நுழைவதற்கானதாக அடையாளமாக அமையும். தங்கள் விண்ணப்பப்படிவம் கிடைக்கப் பெற்றதும் இவற்றைச் தயாரித்து தங்களுக்கு அனுப்பவுள்ளோம். தங்களிடம் ஏற்கனவே உள்ள பழைய பயனாளர் பெயர் இனி பயன்படாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

 

மாவீரர் ஓவியப்போட்டி குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfZyuK87Yhy1JOIWdhjWtvT8iaKMi0au-naXCM5S4AYrbe8Mg/viewform

 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo