Home

அறிவித்தல்

 

பேச்சுப் போட்டிக்கான தெரிவுப்போட்டி 2020.

தொய்யன், மொட்டன்ஸ்றூட் மற்றும் ஒஸ்போல்ட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் பேச்சுப் போட்டிகளுக்கான தெரிவுப்போட்டி எதிர்வரும் 08.02 சனிக்கிழமை மதியம் 13.00 மணிக்கு தொய்யன் வளாகத்தில் (BrynSkole) நடைபெறும். தெரிவுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 12.45 மணிக்கு முன்னர் வளாகத்தில் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். இறுதிப்போட்டி 15.02 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மொட்டன்ஸ்றூட் வளாகத்தில் நடைபெறும்.

தெரிவுப்போட்டியில் பங்குபற்றுபவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 08.02.2020 சனிக்கிழமை அன்று வழமையான வகுப்புகள் நடைபெறும்.

நிருவாகம்

அறிவித்தல்

 

பெற்றோர் கூட்டம்

பெற்றோர் கூட்டம் 04.01 சனிக்கிழமை காலை 11:15 மணிக்கு நடைபெறும், அன்று பேச்சுப்போட்டி தொடர்பான மேலதிக தகவல்கள் வழங்கப்படும்.

கல்வியற் போட்டிகளிற்கான பேச்சுப்போட்டிகள்.

மாணவர்களிற்கான பேச்சுத்தாள்கள் எதிர்வரும் 04.01 சனிக்கிழமை வகுப்புக்களில் வழங்கப்படும், தெரிவுப்போட்டி 08.02 அன்றும் இறுதிப்போட்டி 15.02 அன்றும் நடைபெறும்.

தமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா) 2020

எதிர்வரும் 18.01.2020 சனிக்கிழமை 11:30 மணிக்கு நடைபெற இருக்கும் தமிழர் வள ஆலோசனை மையம், அன்னை பூபதி வளாகங்கள் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம். இவ் விழா எமது பிள்ளைகளிற்கு எமது பண்பாடு கலாச்சாரத்தை கொண்டு செல்லும் நோக்குடன் நடாத்தப்படும் நிகழ்வாகும் எனவே நிச்சயமாக எல்லோரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இடம்:

15 Oslo Kristne Senters lokaler, Trondheimsveien 50G, 2007 Kjeller.

நிருவாகம்

அறிவித்தல்

நத்தார் விழா 2019

14.12.2019 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு எமது பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் நடபெறும். அத்துடன் ஓவியம், உறுப்பெழுத்து, கட்டுரை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு வைபவமும் மற்றும் சென்ற கல்வியாண்டில் தரம் 10 நிறைவுசெய்து வெளியேறிய மாணவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கப்படும்.

நத்தார் விழாவை அடுத்து வகுப்புகளில் மாணவர்களிற்கான தேற்சியறிக்கை வழங்கப்படும்.

14.12.2019 சனிக்கிழமையன்றே இக்கல்வியாண்டின் இறுதி நாளாகும்.

அங்கத்தவர் கட்டணத்தை இன்னும் சிலர் செலுத்தாமல் உள்ளீர்கள், கட்டணத்தை செலுத்துவதற்கான இறுதி நாள் 31.12.2019 அகும், செலுத்தாதவர்கள் எதிர்வரும் கல்வியாண்டிலிருந்து உங்கள் அங்கத்தவர் சலுகையை இழக்கநேரிடும்.

நிருவாகம்

 

அறிவித்தல்

 

அரையாண்டு தேர்வு

மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு சனிக்கிழமை 07.12 அன்று நடைபெறும்.

பிரத்தியேக பெற்றோர் கூட்டம்

பெற்றோர்களுக்கான பிரத்தியேக கூட்டம் சனிக்கிழமை 07.12, காலை11:15 மணிக்கு நடைபெறும்.

கல்வியற் போட்டிகளின் முடிவுகள்

உறுப்பெழுத்து, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றியீட்டியோர் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நிருவாகம்

 

அறிவித்தல்

 

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டி 2019.

ஓவியப்போட்டிகள். சனிக்கிழமை 09.11.19 அன்று நடைபெறும்.

போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்ட தலைப்புக்கள்:

பிரிவு 1 (வகுப்பு  5, 6 )

  • தமிழீழத்தின் அழகு அல்லது
  • மாவீரர் துயிலுமில்லம்

பிரிவு 2 (வகுப்பு  7, 8 )

  • தமிழீழப் பகுதிகளில் அபிவிருத்தியும் வள சுரண்டல்களும் அல்லது
  • நீராவியடிப் பிள்ளையாரும் பௌத்தமதமாக்கலும்

பிரிவு 3 (வகுப்பு  9, 10 )

  • உலகம் அழித்த குறியீடு முள்ளிவாய்க்கால் அல்லது
  • கின்னியா வென்னீர்ஊற்றும் பௌத்தமதமாக்கலும்

பிரிவு 4 (வகுப்பு  11 )

  • தமிழர்களின் மறைக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்கள், அல்லது
  • மாவீரர் நாளும் தமிழீழத்தின் இன்றைய சூழலும்

நிருவாகம்

அறிவித்தல்

 

நவராத்திரி விழா

12.10.19சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு எமது பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகும். விழாவின் பின் வழமையான வகுப்புக்கள் 11:15 - 12:30 மணிவரை நடைபெறும். இவ் விழாவிற்கான நிகழ்ச்சிகளை வகுப்பு-4, வகுப்பு-7 மற்றும் வகுப்பு-8 மாணவர்கள் இணைந்து நடத்த உள்ளார்கள். நிகழ்ச்சிகளிற்கான ஒத்திகைகள் 11.10.19 வெள்ளிக்கிழமை 18:00 மணிக்கு Bryn பாடசாலையில் நடை பெறும்.

பெற்றோர்களே !.. நவராத்திரி விழாவிற்கு தேவையான பொங்கல், அவல் மற்றும் சுண்டல் என்பவற்றை செய்து கொடுத்து 4ம், 7ம், 8ம் வகுப்பு பெற்றோருக்கு ஒத்துழைப்பை வழங்கி இவ்விழாவை சிறப்பிற்போம்.

நிருவாகம்

 

அறிவித்தல்

 

வகுப்பறைச்சந்திப்புக்களின் நேர அட்டவணை:

21.09.19 சனிக்கிழமை

ஆண்டு   5, 6 -  மணி   10:00

ஆண்டு   3    -   மணி   11:15

பெற்றோர்களின் கவனத்திற்கு: நடைபெறும் வகுப்பறை சந்திப்புக்களில் தவறாது பங்குகொள்ளவும்.

நிருவாகம்

அறிவித்தல்

 

நீரிழிவு நோய் தொடர்பான கலந்துரையாடல்

எதிர்வரும் 14.09 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு நீரிழிவு நோய் தொடர்பான கலந்துரையாடலும் அதன் பின்பு குருதிப் பரிசோதனைக்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடல் நோர்வே தமிழர் சுகாதார அமைப்பின் வைத்தியதுறையில் இறுதி ஆண்டு மாணவியான ராகினி மேகநாதன் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நிருவாகம்

அறிவித்தல்

 

11ம் ஆண்டுக்கான வகுப்பு

மாணவர்களின் தமிழ் ஆளுமையை மேன் மேலும் வளர்ச்சியடைய செய்யும் நோக்கத்துடன் எமது வளாகத்தில் 11ம் ஆண்டுக்கான வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ் வகுப்பு சனிக்கிழமை 07.09.2019, மதியம் 12:30 மணிக்கு ஆரம்பமாகும். வகுப்பு நேரம் சனிக்கிழமைகளில், 12:30 - 14:30 வரை நடைபெறும்.

இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் toyenannai@gmail.com என்ற மின்னஞ்சலில் உங்கள் பெயர், தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்து கொள்ளவும்.

11ம் ஆண்டு பெற்றோர்களிற்கான சந்திப்பு சனிக்கிழமை 31.08.2019 காலை 10.00 மணிக்கு நடைபெறும்.

நிருவாகம்

அறிவித்தல்

 

புதிய கல்வியாண்டு 2019-2020

எதிர்வரும் 24.08.19 சனிக்கிழமை, 09.30 மணிக்கு ஆரம்பமாகும்.

அன்பான மாணவச் செல்வங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களே மீண்டுமோர் புதிய கல்வியாண்டில் தமிழ் மொழியாம் தாய்மொழியை எமது சந்ததியினருக்கு கொண்டு சென்று எம் மொழியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையில் உள்ளோம். தாய்மொழியே நம் பண்பாட்டின் வழியும் நம் அடையாளமுமாகும் ஆதலால் தமிழ் மொழியை வளர்ப்பதற்காய் தமிழ்க்கல்வியை கற்றிடுவோம் வாரீர் வாரீர் !.

  • பாடசாலை கொடி ஏற்றல் நிகழ்வோடு வகுப்புக்கள் ஆரம்பமாகும்.
  • புதிய மாணவர்களை இணைத்தல் காலை 10:00 மணி.

பாட நூல்கள் வழமைபோல் வகுப்புக்களில் விற்பனை செய்யப்படும். மாணவர்களுக்கு தேவையான பாட நூல்களின் விபரத்தையும் அதற்கு உரிய பணத்தையும் கடிதஉறையில் வைத்து மாணவர்களிடம் கொடுத்து அனுப்பி வைக்கவும். பாடநூல்கள் வகுப்பறைகளில் விநியோகிக்கப்படும்.

சென்ற கல்வியாண்டில் எம்முடன்; உறுதுணையாக இருந்து அனைத்து உதவிகளையும் அளித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கும் எமது அன்புகலந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

நிருவாகம்

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo