Home

You are here

அறிவித்தல்

புதிய கல்வியாண்டு 2018-2019

 

பாடசாலை ஆரம்பம்

அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களையும் இப்புதிய கல்வியாண்டிற்கு வரவேற்று கொள்வதோடு இக்கல்வியாண்டு அனைவருக்கும் இனிதாக அமையவும் பெரும் வளர்ச்சியை அளிக்கவும் வாழ்த்துக்கள்.

சென்ற கல்வியாண்டில் எம்முடன் உறுதுணையாக இருந்து அனைத்து உதவிகளையும் அளித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எமது அன்புகலந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

புதிய கல்வியாண்டு 25.08.2018 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகும். பாடநூல்கள் 10:00 மணி தொடக்கம் இரண்டாம் அடுக்கில் விற்க்கப்படும் மற்றும் புதிய மாணவர்களுக்கான பதிவு 10:00 மணிக்கு ஆரம்பமாகும்.

25.08.18 சனிக்கிழமை ஆசிரியர்கூட்டம் நடைபெறவுள்ளதால் பாடசாலை மதியம் 12:00 மணியுடன் நிறைவடையும்.

நிருவாகம்

அனைத்துலகத் தேர்வு, இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்

 

தேர்வு

02.06.2018 சனிக்கிழமை அன்று அனைத்துலகத் எழுத்துத்தேர்வுகள் காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும். பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் 30 நிமிடங்களிற்கு முன் சமூகம் அளித்தல் வேண்டும்.

மழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலக தேர்வுக்கு விண்ணபிக்காதவர்களுக்கும் வழமையான வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2018

தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 03.06.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 10:00 மணிக்கு Stovner banen இல் ஆரம்பமாகும்.

பங்குபற்றுவோர் விபரங்களும் அழைப்பிதலும் இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது...

மாணவர்களுக்கான பயிற்சிகள்

நடைபெறவிருக்கும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகளளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பயிற்சிகள் நடைபெறும் நாட்கள்:.

30.05.2018   -   18:30 - 20:30

31.05.2018   -   20:30 - 20:30

அங்கத்தவர் கட்டணம் 100 குறோண்கள் செலுத்தவேண்டிய வங்கி இல: 1602.56.23480 கட்டணத்தை வங்கியூடாகச் செலுத்தும் போது குடும்ப இலக்கம் அல்லது மாணவர் இலக்கத்தை குறிப்பிடவும்.

நிருவாகம்

தேர்வுகள், இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்

 

தேர்வுகள்

எதிர்வரும் 26.05.2018 சனிக்கிழமை அன்று வகுப்புகளுக்குரிய ஆண்டிறுதிப்பொதுத்தேர்வுகள் நடைபெறும்.

02.06.2018 சனிக்கிழமை அன்று அனைத்துலகத் எழுத்துத்தேர்வுகள் காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும். பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் 30 நிமிடங்களிற்கு முன் சமூகம் அளித்தல் வேண்டும்.

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2018

தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 03.06.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 10:00 மணிக்கு Stovner banen இல் ஆரம்பமாகும்.

பங்குபற்றுவோர் விபரங்கள் இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது...

பெரும்பாலோனோர் விளையாட்டுப்போட்டிகளிற்கான பதிவுகளை செய்தும் அங்கத்தவர் கட்டணம் 100 குறோண்களை இன்றும் செலுத்தாது உள்ளீர்கள். எனவே கட்டணங்களை விரைவாக செலுத்தவும். வங்கி இல: 1602.56.23480 கட்டணத்தை வங்கியூடாகச் செலுத்தும் போது குடும்ப இலக்கம் அல்லது மாணவர் இலக்கத்தை குறிப்பிடவும்.

நிருவாகம்

புலன்மொழி வளத்தேர்வு

 

புலன்மொழி வளத்தேர்வு

வகுப்புகள் 3, 4, 5 பெற்றோர்களுக்கான அறிவித்தல், 2018 ஆண்டிற்கான புலன்மொழி வளத்தேர்வு பேசுதலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மாணவர்களுக்கு மூன்று தலைப்புகள் கொடுக்கப்படும். அவற்றிலிருந்து மாணவர் ஒரு தலைப்பைத் தெரிவுசெய்து அது தொடர்பான விடையங்களை ஆயத்தம் செய்வதற்கு தேவையான நேரம் வளங்கப்படும். பின்னர் மாணவர்கள் தெரிவு செய்த தலைப்பின் கீழ் ஆசிரியர்களால் ஐந்து வினாக்கள் கேட்கப்படும்.

இம்மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் தலைப்புகள், அவர்களின் பாடப்புத்தகங்களிலிருந்தும் பயிற்சிப்புத்தகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட தலைப்புகளாகவே இருக்கும். ஆகவே அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வரும் சனிக்கிழமை ஆசிரியர்களும் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம்.

05.05.18 சனிக்கிழமை வாய்மொழித்தேர்வு நடைபெற உள்ளதால் மழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலக தேர்வுக்கு விண்ணபிக்காதவர்களுக்கும் வழமையான வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.

கீழே தரப்பட்டுள்ள நேரஅட்டவணை அண்னளவாகவே போடப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை மற்றும் தேர்விற்கு பாவிற்கும் நேரங்களுக்கு ஏற்ப தேர்வு தொடங்கும், முடியும் நேரங்கள் அமையும்.

தேர்வுக்கான வகுப்பு ஒழுங்குகளும் தேர்வு ஆரம்பமாகும் நேர அட்டவணையும் :

ஆண்டு 1, 2, 9   -   08:45

ஆண்டு 8, 10     -   09:45

ஆண்டு 6, 7       -   11:00

ஆண்டு 5, 4, 3    -   12:15

பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும் மேற் தரப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாக சமூகம் தரவேண்டும்.

அனைத்துலகத்துலக எழுத்துத்தேர்வு 02.06.18 சனிக்கிழமை அன்று நடைபெறும்.

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2018

தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 02.06, 03.06-2018 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும்.

வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் அங்கத்தவர் கட்டணத்தை வளாக அலுவலகத்திலோ அன்றி வங்கியினுடாகவோ செலுத்தியிருத்தல் வேண்டும்.

இடம்: Stovner banen
காலம்: 02.06.2018, 03.06.2018
விண்ணப்ப முகவரி: இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்
அங்கத்தவர் கட்டணம்: 100 kr
வங்கி இல: 1602 56 23480
முடிவுத் திகதி: 14.05.2018

 

மாணவர்களின் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

நிருவாகம்

இறுதிப்போட்டிகள் 2018

 

பேச்சுப் போட்டியும், பரிசளிப்பு வைபவமும் 2018

  • நேரம் :   10:00 மணி
  • காலம் :  18.03.2018 (ஞாயிற்றுக்கிழமை)
  • இடம் :    மொட்டன்ஸ்றூட் வளாகம்
    • ( Steinbråten skole)

இறுதிப்போட்டிகள் நடைபெறும் வகுப்பு ஒழுங்கு:

வளர்நிலை 3, 2, 1, ஆரம்பம், ஆண்டு 4, 5, 6, 7, 8, 9,10.

பேச்சுப்போட்டிகள் , மற்றும் PowerPoint presentasjon நிறைவடைந்ததும் பரிசளிப்பு நிகழ்வு ஆரம்பமாகும்.

இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17.03.2018 சனிக்கிழமை வழமையான வகுப்புகள் நடைபெறும்.


நிருவாகம்

 

கல்வியற்போட்டிகள்

 

தெரிவுப்போட்டிகள்

எதிர்வரும் 10.03.18 சனிக்கிழமை, கல்வியற்போட்டிகளின் பேச்சுப்போட்டிகளிற்கான தெரிவுப்போட்டிகள் நடைபெற இருப்பதால் பாடசாலை மதியம் 12:00 மணியுடன் முடிவடையும். தெரிவுப்போட்டிகள் 12:45 மணிக்கு தொய்யன் வளாகத்தில் ஆரம்பமாகும். தெரிவுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டிகள் 2018

இறுதிப்போட்டிகள் 18.03.18 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு மொட்டன்ஸ்றூட் (Stenbråten skole) வளாகத்தில் நடைபெறும். போட்டிகள் ஆரம்பமாகும் வகுப்பு ஒழுங்கு:

வகுப்பு 3, 2, 1 ஆரம்பம் 4, 5, 6, 7, 8, 9, 10

போட்டிகளைத் தொடர்ந்து பரிசளிப்புவைபவம் நடைபெறும்.

 நிருவாகம்

வருடாந்த பொதுக்கூட்டம்

 

வருடாந்த பொதுக்கூட்டம்

வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் பங்குனி மாதம் ( mars ) 03.03.2018 சனிக்கிழமை காலை 11.15 மணிக்கு Brynskole இல் நடைபெறும்.

வருடாந்த பொதுக்கூட்டத்துக்குரிய நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நிருவாகம்

பிரத்தியேக தகவற் கூட்டம்

 

பிரத்தியேக தகவற் கூட்டம்

எதிர்வரும் சனிக்கிழமை 17.02.2018 அன்று 11.15 மணிக்கு பெற்றோருக்கான பிரத்தியேக தகவற் கூட்டம் நடைபெறும்.

நிருவாகம்

வருடாந்தப்பொதுக்கூட்டம் 2018

 

வருடாந்தப்பொதுக்கூட்டம் (Årsmøte)

10.02.2018 அன்று நடைபெற இருந்த ஆண்டுப்பொதுக்கூட்டம் தவிற்க முடியாத சில காரணங்களினால் 03.03.2018 ற்கு மாற்றப்பட்டுள்ளது.

வருடாந்தப்பொதுக்கூட்டம் பங்குனி மாதம் 03.03.2018 சனிக்கிழமை அன்று நடைபெற இருப்பதால் இக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணும் விடயங்கள், வினாக்களை பெற்றோர்கள் 10.02.2018 க்கு முன் எழுத்து மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ நிருவாகத்திடம் சமர்ப்பிக்கவும்.

எம் தாய் மொழியாம் தமிழை எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து எடுத்து செல்ல வேண்டிய கட்டாய தேவை எமக்கு உள்ளது. இதன் நிமிர்த்தம் இளையோரை எம்முடன் இணைத்து செயற்படுவதற்கு, உங்கள் பிள்ளைகளையோ அல்லது உங்களுக்கு அறிமுகமான வேறு இளையவர்களையோ நிருவாகத்தில் இணைந்து செயற்படவிரும்பின் 17.02.2018 ற்கு முன் பெற்றோர்குழுவுடன் தொடர்பு கொண்டு விபரங்களை கொடுக்கவும், அத்துடன் பெற்றோர்கள் ஆகிய நீங்களும் நிருவாகத்தில் இணைந்து செயற்பட விரும்பின் மேற் குறிப்பிட்ட திகதிக்கு முன்பாக பெற்றோர்குழுவுடன் தொடர்புகொள்ளவும்.

Vedtatt av landsmøte இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பட விவரணம் 2018

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் தொய்யன், மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இனைந்து நடாத்தும் கல்வியல் போட்டியின் ஒளிப்பட விவரணத்துக்குரிய தலப்புகள்.

ஆண்டு 7:

  • தமிழிசை
  • விருந்தோம்பல்
  • காலநிலை மாற்றங்கள்

ஆண்டு 8:

  • பாரதியும் பெண்விடுதலையும்
  • வன்னிமண்ணின் பெருமை
  • கொண்டாட்டங்களில் தமிழ்ப்பண்பாடு

ஆண்டு 9

  • ஈழத்துத் தமிழ் கவிஞர்கள்
  • வறுமையின் கொடுமை
  • தேசிய இனங்களின் விடுதலையும் அவற்றின் இன்றைய நிலையும்

ஆண்டு 10:

  • இலக்கியங்களும் நாமும்
  • புலத்தில் தழிழர்

நிருவாகம்

  •  

அறிவித்தல்

 

பாடசாலை நேரம்

பாடசாலை காலை 09:30 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.

தமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா) 2018

எதிர்வரும் 13.01.2018 சனிக்கிழமை 11:30 மணிக்கு நடைபெற இருக்கும் தமிழர் வள ஆலோசனை மையம், அன்னை பூபதி வளாகங்கள் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம். இவ் விழா எமது பிள்ளைகளிற்கு எமது பண்பாடு கலாச்சாரத்தை கொண்டு செல்லும் நோக்குடன் நடாத்தப்படும் நிகழ்வாகும் எனவே நிச்சயமாக எல்லோரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இடம்:

Oslo Kristne Senters lokaler,

 Trondheimsveien 50G,

2007 Kjeller.

 

நிருவாகம்

 

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo