Home

You are here

அறிவித்தல்

திருக்குறள் ஒப்பித்தல்.

 

வணக்கம் பெற்றோர்களே !

எமது மாணவர்களின் மொழி ஆற்றலையும் உலகபொதுமறையான திருக்குறளை அடுத்த சந்ததியை சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு நடத்தப்பட்ட அன்னை முற்ற திருக்குறள் நிகழ்வில் பங்கேற்க சந்தர்ப்பம் கிடைக்காத மாணவர்களுக்காக அன்னை தொய்யன் நிருவாகத்தினால் திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளோம் இவ் நிகழ்வுகள் இரண்டு பிரிவுகளாக Teams இல் 27.03.21 சனிக்கிழமை நடைபெறும்.

  • பிரிவு 1: வகுப்பு 1 - வகுப்பு 6 , வரையும், காலை 10:45 மணிக்கு ஆரம்பமாகும்.

 

  • பிரிவு 2: வகுப்பு 7 - வகுப்பு 10 , வரையும், காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகும்.

பிரிவு 1: பிரிவு 2 ஆகிய இவ்விரு பிரிவுகளும், இரு அரங்குகளாக TEAMS இல் நடைபெறும்.

இன் நிகழ்வில் உங்கள் பிள்ளைகள் இணைந்து கொள்ளவதற்கு, அவர்களிற்கான முழு ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் வழங்குங்கள். அத்துடன் இந்நிகழ்வை பெற்றோர்களும் இணையத்தில் கண்டுகளிக்கலாம்.


நட்புடன், ஆசிரியர்கள், நிருவாகம்.

 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo