Home

You are here

வாரத்தகவல் 09 - 06-03-2021

வணக்கம்,

இணையமுற்றத்தில வழமைபோல வகுப்புகள் நடைபெறும்.

நேர விபரம்:
 

வளர்நிலை 2, 3, 4, 5, 6 மற்றும் 7:    மணி 09:30 - 12:00

மழலையர்  பாலர் மற்றும்  வளர்நிலை 1:   மணி 12:30 - 14:30

அன்னை தமிழ்முற்றக் குழுவின் தகவல்.

பெற்றோருக்கான முக்கிய தகவல்!

திட்டமிட்டபடி இடம்பெறவுள்ள திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 6ம் திகதி சனி பிற்பகல் 15:00 மணிக்கும் 7ம் திகதி ஞாயிறு முற்பகல் 11.00 மணிக்கும் ஆரம்பிக்கும். சனிக்கிழமை நான்கு பிரிவுகளாகவும் ஞாயிற்றுக்கிழமை மூன்று பிரிவுகளாகவும் இந் நிகழ்வுகள் இடம்பெறும் என்பது அறிந்ததே.

ஞாயிறு விண்ணப்பப் படிவத்தில் தவறுதல் இடம்பெற்றுள்ளது. முற்பகல் 11.00, 11.15, 11.30 என்பதற்குப் பதிலாக பிற்பகல் 15:00, 15:15, 15:30 ஆகிய நேரங்கள் மட்டுமே பதியப்பட்டுள்ளது, இதனால் பெற்றோர்கள் பிற்பகலில் திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வுகள் இடம்பெறும் எனக் காத்திருக்கக் கூடும். எனவே இத் தவறை நிவர்த்தி செய்யும் முகமாக இரண்டு வழிகளைக் கையாளலாம் என எண்ணுகிறோம்.

1. ஞாயிறு நிகழ்வில் கலந்து கொள்ளவதற்காக பதிவு செய்த மாணவர்கள் அனைவரும் பின்வருமாறு மணி 15:00, 15:15, 15:30 இற்குப் பதிலாக மணி 11:00, 11:15, 11:30 என்ற நேரத்தில் இணையத்தில் இணைந்து கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
கலந்துகொள்ளக்கூடிய மாணவர்களை நாம் இணைத்து நிகழ்வை நடத்தலாம் எனத் திட்டமிட்டுள்ளோம்.

2. ஞாயிறு முற்பகல் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு பிறிதொரு சந்தர்ப்பத்தை விரைவில் ஏற்படுத்தித் தரலாம் என்பதையும் தெரிவிக்கிறோம்.

இரண்டாவதைத் தெரிவுசெய்தவர்கள் வளாகப்பொறுப்பாளரிடம் விரைவில் தெரிவிக்கவும்.

புரிதலுக்கு நன்றி.

அன்னை தமிழ் முற்றப் பணிக்குழு 2021

நன்றி. 

நிர்வாகம். 
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo